For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 3 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முடிவு

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எம்எல்ஏக்கள் தினகரன், அன்சாரி, சண்முகநாதன் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் | திமுக அமளி- வீடியோ

    சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எம்எல்ஏக்கள் தினகரன், அன்சாரி, சண்முகநாதன் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்க இருக்கிறது. இது இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும். காலை பத்து மணிக்கு கூட்ட தொடர் தொடங்க உள்ளது. இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

    Tuticorin SHooting: 3 MLAs plans to bring an attentive resolution in TN Legislative Assembly today

    சென்ற வாரம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இது தமிழகம் முழுக்க பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது.

    இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த துப்பாக்கி சூடு குறித்தும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை குறித்தும் பேசப்பட வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை சட்டசபையில் எழுப்பும் எண்ணத்தில் உள்ளனர்.

    Tuticorin SHooting: 3 MLAs plans to bring an attentive resolution in TN Legislative Assembly today

    இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எம்எல்ஏக்கள் தினகரன், அன்சாரி, சண்முகநாதன் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விளக்கம் கேட்கப்படும். எம்எல்ஏக்கள் தினகரன், தமிமுன் அன்சாரி, சண்முகநாதன் ஆகியோரில் ஒருவர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவார் என்று கூறப்பட்டுள்ளது. .

    English summary
    Tuticorin SHooting: 3 MLAs Dinakaran, Ansari, Shamuganathan plan to bring an attentive resolution in TN Legislative Assembly which starts today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X