For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடமாற்றம்

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்ட தூத்துக்குடி துணை வட்டாச்சியர்கள், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    துப்பாக்கிசூடு நடந்தபோது தாசில்தார் சம்பவ இடத்திலேயே இல்லயாம்

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்ட தூத்துக்குடி துணை வட்டாச்சியர்கள், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இரண்டு வாரம் முன்பு நடந்த பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

    Tuticorin Shooting: Both Taluk Officers transferred after FIR

    இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்றே தெரியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்து இருந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியானது. துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது இரண்டு பேர் என எப்ஐஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி தனி வட்டாட்சியர் சேகர், மண்டல் துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஆணையிட்டதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    English summary
    People tried to kill police says FIR on Tuticorin shooting. Both Taluk Officers transferred after FIR.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X