For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"டார்ச்சர்" செய்கிறார் எஸ்.பி.. கோர்ட்டில் குமுறிய இன்ஸ்பெக்டர்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்து வருவதாக கூறி இன்ஸ்பெக்டர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் செல்வம். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

Tuticorin SP sued in Madurai HC bench

தூத்துக்குடி சிப்காட்டில் போலீஸ் இனஸ்பெக்டராக பணியாற்றினேன். கடந்த ஏப்ரல் 14ம் தேதி ரூ.40 லட்சம் மதிப்பிலான உர மூட்டைகள் திருடு போனது. உடனடியாக வழக்கு பதிவு செய்தேன். மறுநாள் தூத்துக்குடி எஸ்பி மீதான நீதிமன்ற அவதூறு வழக்கில் ஆஜராக மதுரை ஐகோர்ட் கிளைக்கு சென்று விட்டேன்.

ஆனால் பணியை முறையாக செய்யவிலலை என கூறி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் மைக்கில் என்னை திட்டினார். நான் அவரது போனில் ஐகோர்ட்டுக்கு வந்த விபரத்தை தெரிவித்தேன். அப்போதும் என்னை திட்டினார். பின்னர் என்னை நாசரேத் ஸ்டேஷனுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். அங்கு போய் உடனடியாக பணியில் சேர்ந்து விட்டேன்.

ஆனால் காரணமே இல்லாமல் மெமொ கொடுத்தார். தட்டம்பாறை போலீஸ் ஸ்டேஷனில் ஓருநாள் வேலை பார்த்தேன். அங்கு நடந்த கொலையில் 4 பேர் மீது வழக்கு பதிந்தேன். ஆனால் எஸ்பி தலையிட்டு நான் பதிவு செய்த வழக்கை அப்படியே மாற்றி விட்டார். தொடர்ந்து உள் நோக்கத்துடன் டார்ச்சர் கொடுத்து வந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளேன். இதற்கிடையே நாசரேத்துக்கு மாறறியதற்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றேன். ஆனால் என்னை சிப்காட் ஸ்டேஷனில் பொறுப்பு ஏற்க அனுமதிக்கவில்லை.

இதிலிருந்து அவரது உள்நோக்கம தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

''எங்க எஸ்.பி. குழந்தை மாதிரி''... குச்சி மிட்டாய், கரடி பொம்மை கொடுக்க வந்த ஜோதிடர்!!''எங்க எஸ்.பி. குழந்தை மாதிரி''... குச்சி மிட்டாய், கரடி பொம்மை கொடுக்க வந்த ஜோதிடர்!!

English summary
An inspector from Tuticorin has sued district SP in Madurai HC bench of torture charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X