For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி ஆதரவு கொடுத்தவங்க யார் யார் தெரியுமா?

போயஸ்தோட்டத்தில் உள்ள சசிகலாவை சந்தித்து தினசரியும் அதிமுக நிர்வாகிகள் ஆதரவு அளித்து வரும் நிலையில், பிரபல தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர்கள் நேரில் சசிகலாவை சந்தித்து பேசி வருகின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் போயஸ் கார்டன் வீடு தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.

அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது பிற கட்சியினரும், தொழில் அதிபர்களும், கல்வி நிறுவன அதிகாரிகளும், துணை வேந்தர்களும் சசிகலாவை சில தினங்களாக சந்தித்து பேசி வருகின்றனர்.

செய்தி நிறுவன அதிபர்கள், தொலைக்காட்சி நிறுவன அதிபர்கள், செய்தி ஆசிரியர்களும் கூட போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தது சசிகலாவை சந்தித்து பேசி வருகின்றனர்.

தமிமுன் அன்சாரி

தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்தார். ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜ்ஸ்ரீபதி, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொதுச் செயலாளர் எஸ். பாபு, ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர்.

பல்கலைக்கழக துணை வேந்தர்

பல்கலைக்கழக துணை வேந்தர்

அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ். சுப்பையா, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.மணியன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ். தங்கசாமி ஆகியோர், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அனிதா குப்புசாமி

அனிதா குப்புசாமி

அதிமுக நட்சத்திர பேச்சாளர் அனிதா குப்புசாமி மற்றும் அவரது கணவரும், நாட்டுப்புற பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் சசிகலாவிடம் இரங்கல் தெரிவித்தனர்.

டிவி நிறுவன அதிபர்கள்

டிவி நிறுவன அதிபர்கள்

டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு ஆசிரியர் அருண் ராம், ப்ரவோக் பத்திரிக்கையின் பாபு ஜெயக்குமார், நவீன நெற்றிக்கண் மணி, குமுதம் வரதராஜன், நியூஸ்7 செய்தி சேனல் உரிமையாளர் வி வி சுப்பிரமணியன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஆதரவு தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.எஸ். பாத்திமா முசஃபர் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.சகாயராஜ், மாலை தமிழகம் நாளிதழ் குழுமங்களின் தலைவரும், ஆசிரியருமான கே. சர்வோதயம் ஆகியோரும் போயஸ் தோட்டத்திற்கு வந்து ஆறுதல் கூறினர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பலரும் போயஸ்தோட்டத்திற்கு வேதா நிலையத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பலரும் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

English summary
Amongst the many visitors Sasikala Natarajan has had these past days are the top brass of Tamil Nadu-based media houses. Editors and owners of several media organisations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X