For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் டிவியில் சீரியல்... கலைஞர் டிவியில் சினிமா... கேப்டன் டிவியில் மருத்துவக் குறிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தொலைக்காட்சிகளில் என்ன நிகழ்ச்சி ஓடுகிறது என்பதை வைத்து எந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதை கணித்து விடலாம் என்று நேற்றைய தினமே சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் மீம்ஸ் பதிவிட்டனர். அதேபோல அதிமுக முன்னணி நிலையில் உள்ளதால் சன் டிவியில் சீரியலும், கலைஞர் டிவியில் சினிமாவும் ஒளிபரப்பி வருகின்றனர். கேப்டன் டிவியில் மருத்துவ குறிப்பும், மக்கள் டிவி அண்டம், பேரண்டம் என்ற வானியல் பற்றிய ஆவணப்படத்தை ஒளிபரப்பி வருகின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடன் அனைத்து ஊடகங்களும் பரபரப்பாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்தன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட உடனேயே திமுக முன்னிலை என்றது சன் டிவி. அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

TV Channels telecast program on election result day

இது எல்லாம் கவர்மண்ட் ஆபிசருங்க போட்டது அவங்க திமுகவிற்குதான் போட்டிருப்பாங்க. மிஷினை தட்டட்டும் அப்புறம் தெரியும் என்றது அதிமுக தரப்பு. சொன்னது போலவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கிய உடன் அதிமுக நூறு தொகுதிகளுக்கு மேல் முன்னணி நிலையிலேயே வந்தது. இதனையடுத்து வெற்றிக் கொண்டாட்டத்தை அதிமுகவினர் தொடங்கினர்.

சன் டிவி தனது நேரலையை நிறுத்திவிட்டு வழக்கம் போல சீரியல் பக்கம் திரும்பியது. கலைஞர் டிவி நம்பிக்கையுடன் நேரலையை தொடர்ந்தது. மக்கள் டிவி, கேப்டன் டிவியிலும் வாக்கு எண்ணிக்கை நேரலை செய்யப்பட்டது.

நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவராக கடையை மூடத் தொடங்கினர். கலைஞர் டிவி ஜூலை 4 என்ற திரைப்படத்தை ஒளிபரப்பினர். அதே நேரத்தில் கேப்டன் டிவியில் சமையல் குறிப்பும், மருத்துவ குறிப்பும் ஒளிபரப்பானது.

மாற்றம் முன்னேற்றம் என்று களமிறங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் தொலைக்காட்சியில் அண்டம்... பேரண்டம் என்று வானியல் பற்றிய ஆவணப்படத்தை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டனர்.

English summary
SunTV, kalaignar TV,Makkal TV and Captain TV stoped live telecast in Election result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X