For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காடுவெட்டி குரு மறைவு... அஞ்சலி செலுத்த முடியாமல் கதறி அழுத வேல்முருகன்

காடுவெட்டி குரு மறைவு செய்தியை கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கதறி அழுதார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட வேல்முருகன்

    சென்னை: காடுவெட்டி குரு மறைவு செய்தியை கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கதறி அழுதார்.

    பாமகவின் முக்கிய தலைவர்களுல் ஒருவரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு நேற்று காலாமானார். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்றிரவு மாராடைப்பால் மரணமடைந்தார்.

    அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    குரு மறைவுக்கு இரங்கல்

    குரு மறைவுக்கு இரங்கல்

    இந்நிலையில் ஜெ. குரு மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். புழல் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

    சட்டத்திற்கு புறம்பாக

    சட்டத்திற்கு புறம்பாக

    அவர் பேசியதாவது, ‘மாவீரன் காடுவெட்டி குரு அவர்களின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டமிட்ட கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் அராஜகப் போக்கு சட்டத்திற்கு புறம்பாக இந்த கைது சம்பவம் நடந்துள்ளது‘ என கூறினார்.

    வேல்முருகன் வேண்டுகோள்

    வேல்முருகன் வேண்டுகோள்

    காடுவெட்டி குரு அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் தங்களது கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என அவரது தொண்டர்களுக்கு வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

    கதறி அழுத வேல்முருகன்

    கதறி அழுத வேல்முருகன்

    25 ஆண்டுகாலம் ஒன்றாக தங்களோடு பயணித்த காடுவெட்டி குரு அவர்களின் மறைவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

    English summary
    TVK leader Velmurugan cried for J Guru demise. He asked TVK workers to participate in the Guru's last rites.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X