For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News Live: எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பெண் செய்தியாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்தை பகிர்ந்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.,வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஏப்.29-ல் மெரினாவில் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில் வரும் 29-ந் தேதியன்று போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரி 71-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அனைத்து கிராம மக்களின் கூட்டமைப்பு சார்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை- பாஜக பிரமுகர் கைது

திருவனந்தபுரம் - சென்னை ரயிலில் நள்ளிரவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஓடும் ரயிலில் 10 வயதுக்கும் குறைவான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான் காமுகன். ஈரோடு ரயில் நிலையத்தில் காமுகனை பிடித்து போலீசில் பெற்றோர் ஒப்படைத்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட காமுகன், 2006-ம் ஆண்டு பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகர் தொகுதியி0ல் போட்டியிட்டவர் என தெரியவந்துள்ளது. அத்தேர்தலில் 1858 வாக்குகள் மட்டும் பெற்றவர் பிரேம் ஆனந்த். தென் சென்னை மாவட்ட பாஜக நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார் பிரேம் ஆனந்த். நடிகர் சந்தானத்துடன் மோதலில் ஈடுபட்டு அடிவாங்கியவரும் இந்த பிரேம் ஆனந்த்.

Newest First Oldest First
8:58 PM, 23 Apr

காவிரி வாரியம் அமைக்கக் கோரி மக்கள் எழுச்சியுடன் போராடினர் - ஸ்டாலின்
8:58 PM, 23 Apr

மனிதசங்கிலி போராட்டம் உணர்வுப் பூர்வமாக நடந்தது - ஸ்டாலின்
8:58 PM, 23 Apr

மதுரை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டி
8:58 PM, 23 Apr

மாநிலம் முழுவதும் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டம் வெற்றி - ஸ்டாலின்
8:02 PM, 23 Apr

கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
8:02 PM, 23 Apr

சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்குவதை மன்னிக்க முடியாது - ரஜினிகாந்த்
8:02 PM, 23 Apr

நண்பர் என்ற முறையில் குருமூர்த்தியை சந்தித்தேன் - ரஜினி
8:02 PM, 23 Apr

அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க முடியாது - ரஜினிகாந்த்
7:42 PM, 23 Apr

நிர்மலாதேவி விவகாரத்தில் ஒரு வருடத்திற்கான சிசிடிவி காட்சிகள் சோதனை
7:42 PM, 23 Apr

காமராஜர் பல்கலை. விருந்தினர் மாளிகையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்கிறது போலீஸ்
7:42 PM, 23 Apr

புத்தாக்க பயிற்சிக்காக நிர்மலா தங்கி இருந்த விடுதியிலும் விசாரணை
7:42 PM, 23 Apr

ஆடியோ லீக் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பேராசிரியர் கருப்பசாமி நண்பர்களிடம் விசாரணை
7:20 PM, 23 Apr

மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ்
7:20 PM, 23 Apr

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
7:19 PM, 23 Apr

அருணாச்சலின் 16 பகுதிகளில் அமலில் இருந்த சிறப்புச்சட்டமும் வாபஸ்
7:19 PM, 23 Apr

சிறப்புசட்டம் ரத்தானதற்கு போராளி ஐரோம் ஷர்மிளா வரவேற்பு
4:52 PM, 23 Apr

பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்
4:52 PM, 23 Apr

பெண்பத்திரிக்கையாளர்கள் பற்றி இழிவான கருத்தை பகிர்ந்ததால் சேகர் மீது வழக்கு
4:52 PM, 23 Apr

கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஹைகோர்ட்டில் மனு
4:52 PM, 23 Apr

உள்நோக்கத்துடன் கருத்தை பகிரவில்லை என எஸ்.வி.சேகர் மனுவில் விளக்கம்
4:52 PM, 23 Apr

மன்னிப்பு கேட்டுவிட்டதால் ஜாமின் வழங்க எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்
4:37 PM, 23 Apr

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல்
4:11 PM, 23 Apr

தமிழகம் முழுவதும் 9 கட்சிகள் மனித சங்கிலி
4:11 PM, 23 Apr

காவிரி மேலாண்மை வாரியம் கோரி மனித சங்கிலி
4:11 PM, 23 Apr

மத்திய அரசைக் கண்டித்து திமுக தோழமை கட்சிகள் மனித சங்கிலி
3:50 PM, 23 Apr

சசிகலாவை சிறையில் இருந்து மீட்கப் போவதாக திவாகரன் சொல்வது பொய்- வெற்றிவேல்
3:49 PM, 23 Apr

தினகரன் ஆதரவு 21 எம்.எல்.ஏக்கள் பற்றி ஜெய் ஆனந்த் தவறான தகவல் பரப்புகிறார்- வெற்றிவேல்
3:49 PM, 23 Apr

திவாகரன், ஜெய் ஆனந்துக்கு வெற்றிவேல் கடும் கண்டனம்
3:36 PM, 23 Apr

ஒரு தரப்பினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்
3:36 PM, 23 Apr

2016ல் இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதாக தகவல்
READ MORE

English summary
Tamizhaga Valvurimai Katchi Leader Velumurugan said that his party cadres will protest at Marina on Apr 29 to demand to set up the Cauvery Managment Board. Eariler Velmurugan has urged the TamilNadu Govt and the police to allow peaceful and democratic protests at Marina.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X