For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட வீரருக்காக மக்கள் பிரார்த்தனை: மீட்பு வீடியோ இதோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட வீரர் விரைவில் நலமடைய மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சின் சிகரத்தில் கடந்த புதன்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 4 தமிழக வீரர்கள் உள்பட 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.

அந்த 10 பேரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஹனுமந்தப்பா கோப்பாட் 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து மக்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மரணம்

இந்த நபர் மரணத்தையே ஏமாற்றிவிட்டார். 6 நாட்கள் 25 அடி ஆழத்தில் பனியில் இருந்துள்ளார். #SiachenMiracle என்று தத் ட்வீட் செய்துள்ளார்.

பிரார்த்தனை

கடும் குளிருடன் போராடிய எங்கள் வீரர் ஹனுமந்தப்பா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்கிறார் அர்பிதா.

குணமடைய

25 அடி ஆழத்தில் பனியில் 6 நாட்கள்! அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம் என்று மனிஷ் குர்பதே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வீரர்

உயிருடன் மீட்கப்பட்ட வீரர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். ஐ லவ் இந்திய ராணுவம் என்று பவன் கூறியுள்ளார்.

ராணுவம்

ராணுவ வீரர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தற்போது தான் அறிந்தேன். அனைவரும் நம்பிக்கையை இழந்தும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்படும் நம் ராணுவத்திற்கு குடோஸ். சிறந்த தகவலுடன் நாளை துவங்குகிறேன் என்கிறார் அமித்.

English summary
Tweeples are praying for the speedy recovery of the soldier who has been rescued alive after 6 days in Siachen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X