For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ வழக்கு: நேற்று அன்னையர் தினம்… இன்று அம்மா தினம்… ட்விட்டரில் கலக்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அனைவரின் பார்வையும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நோக்கியிருக்கின்றன. அனைத்து சாலைகளும் பெங்களூருவை நோக்கி செல்கின்றன. காரணம் ஜெயலலிதா அப்பீல் வழக்கில் இன்றைக்கு தீர்ப்பு வரப்போகிறதே.

ஜெயலலிதாவுக்கு விடுதலையா? சிறையா? என்பதுதான் இன்றைக்கு அனைவரின் முன் நிற்கும் கேள்வியாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட செப்டம்பர் மாதம் தொடங்கி இன்று வரை கடந்த 8 மாதகாலமாக தமிழகத்தில் அதிமுகவினரும் அமைச்சர்களும் செய்யும் வேள்விகளும், யாகங்களும், பூஜைகளும் மக்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது என்றே கூறப்படுகிறது.

தீர்ப்புநாளான இன்று ஊடகங்கள் மட்டும் பரபரப்பாக இல்லை. சமூக வலைத்தளங்களும் பரபரப்பாகவே காணப்படுகிறது. எனவேதான் #JayaVerdict என்ற ஹேஸ்ட் டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலவித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் ட்விட்டர்வாசிகள்.

ட்ரெண்ட் நம்பர் 1

ஜெயலலிதா தீர்ப்பு பற்றிய செய்திதான் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

அட்வான்ஸ் ஆக சொன்ன சுப்ரமணியசுவாமி

ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பு மே 11ஆம் தேதி என்று வெள்ளிக்கிழமை மாலைதான் (8ம் தேதிதான்) கர்நாடகா நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் இந்த தீர்ப்பு நாள் குறித்து மே 5ம் தேதியே பதிவிட்டுள்ளார் பாஜக தலைவர் சுப்ரமணியசுவாமி.

அம்மாதினம்

உலக அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இன்றைக்கு தீர்ப்பு என்பதால் இதனை அம்மா தினமாக அதிமுகவினர் கொண்டாடுவர்கள் என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

போக்ரான் சோதனை

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1998 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த வெற்றிதினத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மோடி. இதோடு இணைத்து ஜெயா தீர்ப்பு நாளோடு இணைத்து பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

சிறப்பு பூஜைகள் ஏன்

ஜெயலலிதாவுக்கு எதிராக அதிமுகவினர் செய்யும் பூஜைகள் குறித்து பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

ஆசிட் டெஸ்ட்

சல்மான்கானுக்கு பிற்பகலில் தண்டனை கொடுத்து மாலையில் ஜாமீனில் விடுவித்தனர். அது பலத்த சர்ச்சையை கிளப்பியது. அதேபோல இந்த நீதித்துறைக்கு இது ஆசிட் டெஸ்ட் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

அதுக்கு இது பரவாயில்லை

இப்போது நடைபெறும் ஊழல்களை விட ஜெயலலிதா செய்த ஊழல் பெரிய விசயமில்லை என்றும் அவர் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார் ஒருவர்.

நாங்கதான் எல்லாமே

தீர்ப்பு எதுவாயினும் எப்பவுமே தமிழ்நாட்டுக்கு தலைமை நாங்க தாண்டா என்கின்றனர் அதிமுகவினர்.

பணம் பாதாளம் வரை பாயும்

பணத்தினால் எதையும் வாங்க முடியும்... என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

English summary
The latest Tweets on #Jayaverdict. Read what people are saying and join the conversation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X