For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் முதுமையை விமர்சிப்பதா? ட்விட்டரில் எச்.ராஜாவுக்கு செம 'ரிவிட்'

கருணாநிதியின் முதுமையை விமர்சிப்பதா என கேட்டு டுவிட்டரில் எச்.ராஜாவுக்கு எதிராக கருத்துகள் வலம் வருகின்றன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத கருணாநிதி...ட்வீட் போட்ட எச்.ராஜா- வீடியோ

    சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்தின் போது கருணாநிதி வயது மூப்பு காரணமாக எழுந்து நிற்காத வீடியோவை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு டுவிட்டரில் கண்டனங்கள் குவிகின்றன. மேலும் கருணாநிதியின் முதுமையை விமர்சிப்பதா என கேட்டு அவரை வறுத்தெடுத்து விட்டனர்.

    சென்னையில் எச்.ராஜாவின் தந்தையாரின் விழாவில் கலந்து கொண்ட காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவோ பதிலுக்கு பதில் சரியா போச்சு என்ற தொனியில் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அதில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது கருணாநிதி எழுந்து நிற்கவில்லை என்று குசும்புத்தனமாக நோ கமென்ட்ஸ் என கூறியுள்ள எச். ராஜா மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய கீதம் பாடுவதற்கு கருணாநித எழுந்து நிற்பது போன்ற புகைப்படம் உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

    நெட்டிசன்கள் கருத்து

    நெட்டிசன்கள் கருத்து

    எச்.ராஜா வெளியிட்ட வீடியோவுக்கு வந்த டுவிட்டர் கருத்துகளில் கருணாநிதி உட்கார்ந்திருப்பது போன்ற வீடியோவும் நிற்பது போன்ற போட்டோவும் வேறு வேறு விழாக்களில் எடுக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் இவற்றை உட்கார்ந்து ஒட்டி கொண்டிருந்துள்ளாரே ராஜா என்று டுவிட்டரில் ஓட்டி வருகின்றனர். மேலும் வீடியோவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தோளில் அணிந்துள்ள துண்டும், போட்டோவில் அணிந்துள்ள துண்டும் வெவ்வேறானவை. இது கூட எச்.ராஜாவுக்கு தெரியாதா என்று கேள்வி கணைகளால் நெட்டிசன்கள் ராஜாவை வதைக்கின்றனர். மேலும் வயது மூப்பினால் கருணாநிதி எழுந்திருக்காததையும் விஜயேந்திரர் எழுந்திருக்காததையும் நியாயப்படுத்துவதா என்றும் கேட்டுள்ளனர். கிட்டத்தட்ட வாசகர்கள் வீடியோவுக்கு புகைப்படத்துக்கும் இடையே குறைந்தது 6 வித்தியாசங்களையாவது கண்டுபிடித்திருப்பர்.

    தவறு செய்வேனு

    வயது மூப்பு ஒரு காரணமா இருக்கலாம்.ஆனா அப்ப இந்த அளவுக்கு மீடியாகளும் சமூக வலைதலங்களும் இல்லை.இருந்தா கண்டிப்பா விமர்சணத்திற்கு உட்படுத்தபட்ருபாரு.அதேமாரி ஒருத்தர் தவறு பன்னாரு அதனால நானும் தவறு செய்வேனு சொல்ரது என்ன நியாயம் சார்.?

    வேறு விழா

    நீங்க இத்தனை அற்பமானவரா ?? ஒன்று அவர் நடமாடிய பொழுது நடந்த விழா, மற்றொன்று நாற்காலி இருக்கை விழா.. இரண்டும் ஒன்றா ? மேலும் தவறு என சுட்டிக்காட்டினால் தியானம் என கலைஞர் மழுப்ப மாட்டார்.

    மறு தவறை நியாயப்படுத்துவதா?

    ஒரு தவறுக்கு மற்றொரு தவறான மேற்க்கோள் சரியென ஆகாது.

    English summary
    H.Raja releases the video of Karunanidhi in which he was sitting when Tamil Thaai was played, He also released the photo while he stands for National Anthem. Both are taken in different occasions, Netisans blasted H.Raja for criticising Karunanidhi's age.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X