கண்டனம், கோபம், இரங்கல்.. விக்னேஷ் தற்கொலை பற்றி சமூகவலைத்தளங்களில் மாறுபட்ட கருத்து
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி விக்னேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து சமூக வலைத்தளங்களில் மாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன.
சிலர் அனுதாபமாகவும், சிலர் கோபமாகவும் விக்னேஷ் குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்த தற்கொலைகளை சீமான் தடுத்திருக்க முடியும் என்பது மேலும் சிலரின் ஆதங்கமாக உள்ளது.
சிலர் ஊடங்கள் மீது சாடியுள்ளனர். சிலர், இனிமேலும் இதுபோல யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்பதை அறிவுறுத்தியுள்ளனர்.
விக்னேஷ் தற்கொலை குறித்து டிவிட்டரில் வெளியாகியுள்ள சில கருத்துக்களை பாருங்கள்.
|
நெருப்பாய் இரு
" இருப்பாய் தமிழா நெருப்பாய் " என்று செந்தமிழன் சீமான் முழங்கியதை தப்பாய் புரிந்துக்கொண்டாயோ #விக்னேஷ்குமார்.. என்று சொல்கிறது இந்த டிவிட். நெருப்பில் குளித்ததை இந்த டிவிட் சுட்டிக்காட்டுகிறது.
|
தலைவர்கள் தப்பிவிடுவர்
எந்த கட்சித்தலைவன் தீக்குளிச்சு சாவறானோ, அந்த கட்சிக்கு வாழ்நாள் முழுக்க ஓட்டு போடலாம்னு பார்க்கிறேன், ஒருத்தனும் சாக மாட்டிக்கிறான், என்கிறது இந்த டிவிட்.
|
குடும்பத்தை நினைக்கனும்
விக்னேஷ் மரணம் மனவலியை தருகிறது - சீமான்.. உங்களுக்கு மனவலி மட்டும்தான், அந்த பையன் குடும்பத்தை நினைச்சு பாருங்க.. என்று சொல்கிறது இந்த டிவிட்.
|
போதும் வீர வணக்கம்
முத்துக்குமார்,செங்கொடி,விக்னேஷ் 3வீரவணக்க நாள் உருவாக்கிடாங்க. ஆனா வருசத்துக்கு இன்னும் #362நாட்கள் இருக்கிறதை நினைச்சாதான்.. என்று சொல்கிறது இந்த டிவிட்.
|
பெற்றோர் நிலை பரிதாபம்
எத்தனை கனவுகள்... எதிர்பார்ப்புகள்... உன் பெற்றோரின் ஒப்பாரி உனக்கு கேட்கட்டும். #விக்னேஷ் #அரசியல்(தற்)கொலைவேண்டாம்.. என்கிறது இந்த டிவிட்.
|
அரசியலில் இது சகஜமாம்
விக்னேஷ் உடலினை துருப்பு சீட்டாக வைத்து போராட்டம் நடத்தி காவிரி உரிமத்தை மீட்டு விட்டுவோம்,,,!!!! தமிழக அரசியல் பொறுத்தவரை உயிர்கள் மலிவே என்று வேதனை வெளிப்படுத்துகிறது இந்த டிவிட்.
|
ஊடகங்கள் மீது பாய்ச்சல்
தீக்குளித்த விக்னேஷ் இப்போதுதான் உயிர் இழந்ததாக செய்திகள் வருகின்றன ஆனா ஊடகங்கள் நேத்தே கருமாதி செய்துவிட்டன. என்று கூறுகிறது இந்த டிவிட். சில காட்சி ஊடகங்கள் விக்னேஷ் இறந்துவிட்டதாக நேற்றே செய்தி வெளியிட்டதை கொட்டியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications