For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை நெகடிவ் ஆக ட்ரெண்ட் செய்த திமுகவினர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எப்போ வரும்... என்னென்ன இருக்கும் என்று வாக்காளர்கள் மட்டுமல்லாது திமுகவினர் உள்ளிட்ட எதிர்கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் அறிக்கையை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வெளியிட்டார் ஜெயலலிதா.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பெண்கள், மாணவர்கள், விவசாயிகளுக்கு சாதகமான பல முக்கிய அம்சங்கள் உள்ளன. விவசாய கடன் முற்றிலும் ரத்து, தாலிக்கு 8 கிராம் தங்கம், மெபெட் வாங்க 50 சதவிகிதம் மானியம், மாணவர்களுக்கு லேப்டாப் உடன் இலவச இணைய வசதி ஆகியவை கொடுக்கப்பட உள்ளது.

இந்த தேர்தல் அறிக்கை பற்றிய ஹேஸ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது அதிமுகவினர் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்ட நிலையில், இதற்கு எதிராக திமுகவினர் #MadeInChinaManifesto என்ற பெயரில் ட்ரெண்ட் செய்தனர்.

அம்மாடா...

அதிமுக அதிரடி தேர்தல் அறிக்கை வெளியீடு எதிர்கட்சிகள் நிலை கஷ்டம் தான் என்று கூறிய கரகாட்டக்காரன் படத்தின் போட்டோவை வைத்து மீம்ஸ் போட்டுள்ளார் அதிமுக ஆதரவாளர்.

இது வாங்குனா இது ப்ரீ...

செல்போன் வாங்குனா சென்ட் ஃப்ரி என்பதுபோலதான் உள்ளது அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது இந்த வலைஞரின் கிண்டல்.

கிழி... கிழி...கிழி

அதிமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறாது. படித்த உடன் கிழித்து விட வேண்டியதுதான் என்பது இந்த வலைரின் கமெண்ட்.

அம்மாவின் கைபேசி

வெள்ள நேரத்தில் வாட்ஸ்அப் மூலம் ஆறுதல் சொன்ன ஜெயலலிதா, இனி தேர்தல் சமயத்துலயும் வாட்ஸ்அப் வழியாக வந்து வாக்கு கேட்கவே இலவச செல்போன் திட்டம் என்கிறார் இவர்.

லோக் ஆயுக்தா

லோக் அயுக்தா கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பிற்காகவே இந்த கமெண்ட்.

பாஜகவின் காப்பி

தமிழகத்தில் தாலிக்கு தங்கம் 4 கிராம் தரப்படுகிறது. இது 8 கிராமாக உயர்த்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார். இது பாஜகவின் காப்பி என்பது இந்த வலைஞரின் கருத்து.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட போது

ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் எல்லாம் இப்படித்தான் நிறைவேற்றப்படும் என்பதற்காகவே இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார் திமுக ஆதரவாளர் ஒருவர்.

பழைய இரும்புச்சாமான்

திமுகவின் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை #MadeInChinaManifesto என்ற பெயரில் ட்ரெண்ட் செய்தனர். மின்விசிறி, மிக்சி போல செல்போனும் எடைக்கு போட வேண்டியதுதான் என்பது இவரது கருத்து.

புது ரேசன் கார்டு

அம்மா கடன் அட்டை எல்லாம் இருக்கட்டும், புது ரேசன்கார்டு முதல்ல கொடுங்க என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.

English summary
DMK men trend ADMK manifesto #MadeInChinaManifesto in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X