For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிம்புவின் 'வெரிஃபைட்' குறியீடை திடீரென அகற்றிய டிவிட்டர்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பீப் சாங் சர்ச்சையில் போலீசாரால் தேடப்பட்டுவரும், நடிகர் சிலம்பரசனின், டிவிட்டர் அக்கவுண்ட்டுக்கு கொடுத்திருந்த வெரிஃபைட் ஸ்டேட்டசை டிவிட்டர் திடீரென அகற்றியுள்ளது.

கெட்ட வார்த்தை கலந்த பீப் சாங் பாடியதாக கூறி நடிகர் சிலம்பரசன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Twitter verified symbol removed from Simbu account

சிம்புவை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடிவருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், சிம்புவின் டிவிட்டர் அக்கவுண்டின் வெரிஃபைட் ஸ்டேடசை டிவிட்டர் திடீரென அகற்றியுள்ளது.

செலப்ரட்டீஸ், அரசியல் பிரமுகர்கள் போன்றோரின் டிவிட்டர் அக்கவுண்டுகளுக்கு வெரிஃபைட் என்ற டிக் மார்க் குறியீட்டை டிவிட்டர் வழங்குவது வழக்கம். போலி அக்கவுண்டுகளில் இருந்து வேறுபடுத்திக்காண்பிக்க இந்த குறியீடு உதவும்.

ஆனால், திடீரென சிம்பு டிவிட்டர் அக்கவுண்டில் இதுவரை இருந்த அந்த குறியீடு மாயமாகிவிட்டது. 10 லட்சம் ஃபாலோவர்களை கொண்ட சிம்பு அக்கவுண்டில் வெரிஃபைட் ஸ்டேடஸ் மாயமாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

போலீசார் தேடுவதால், அவரை குற்றவாளி என கருதி, டிவிட்டர் இந்த முடிவை எடுத்துவிட்டதா, அல்லது இவ்வாறு செய்ய சொல்லி டிவிட்டர் நிர்வாகத்திற்கு உயர் இடத்தில் இருந்து புகார் சென்றதா என்பது தெளிவாகவில்லை.

அதேநேரம், அனிருத் டிவிட்டர் அக்கவுண்ட்டில் இன்னும் வெரிஃபைட் ஸ்டேடஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Twitter verified symbol removed from Simbu account
English summary
Twitter verified symbol removed from Simbu account as he is searching by the police for beep song issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X