For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடப்பாடி அணியில் இருந்து எம்.பி.க்கள் செங்குட்டுவன், உதயகுமார் எஸ்கேப்- தினகரனுடன் சந்திப்பு!

எடப்பாடி அணி எம்.பிக்கள் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயகுமார் ஆகியோர் தினகரனை இன்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து எம்.பி.க்கள் செங்குட்டுவன், உதயகுமார் ஆகியோர் தினகரனை இன்று சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்து வெளிப்படையாக பேட்டியளித்து வருகின்றனர். அதேநேரத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள் அமைதி காத்து வந்தனர்.

அமைச்சரவை எதிர்பார்ப்பு

அமைச்சரவை எதிர்பார்ப்பு

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் எம்.பி.க்கள் சிலர் மிகவும் எதிர்பார்ப்புடன் லாபிகளில் ஈடுபட்டனர்.

ஏமாற்றத்தில் அதிமுக

ஏமாற்றத்தில் அதிமுக

ஆனால் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அதிமுகவுக்கு டாடா காட்டப்பட்டுவிட்டது. இதனால் அதிமுக பெரும் ஏமாற்றமடைந்தது.

இரண்டு எம்பிக்கள் தினகரனுடன் சந்திப்பு

இரண்டு எம்பிக்கள் தினகரனுடன் சந்திப்பு

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து எம்பிக்கள் அணி மாற தொடங்கிவிட்டனர். எம்.பிக்கள் செங்குட்டுவன் மற்றும் உதயகுமார் ஆகியோர் சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினர்.

எண்ணிக்கை அதிகரிக்கும்

எண்ணிக்கை அதிகரிக்கும்

இவர்களைத் தொடர்ந்து மேலும் பல எம்.பி.க்கள் தினகரனை சந்திக்க வருவார்கள் எனவும் கூறப்படுகிறது. தினகரன் தரப்புக்கு பலம் இருப்பதாக டெல்லி கருதுவதால் எடப்பாடி அணியுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Two more AIADMK MPs from the EPS Camp today met Dinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X