For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வராக விஜயகாந்த்துக்கு என்ன தகுதி உள்ளது... உதயக்குமார் தாக்கு

Google Oneindia Tamil News

நெல்லை: முதல்வர் ஆகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை என பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஓருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான உதயகுமார் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பச்சை தமிழகம் கட்சி சார்பாக நான் போட்டியிடுகிறேன். எனது தேர்தல் அறிக்கையை ஓப்பந்த அடிப்படையில் தயாரித்து வெளியிட்டுள்ளேன். நானும், வாக்காளர்களும் கையெழுதிட்ட ஓப்பந்தம் வைத்து கொள்வோம்.

Udayakumar slams Vijayakanth

அதன்படி எனது தேர்தல் அறிக்கையில் யாரிடமும் கையூட்டு வாங்க மாட்டேன். எம்எல்ஏ பதவி முடியும் வரை ஓவ்வொரு நிதியாண்டிலும் எனது சொந்து கணக்கையும், வருமான கணக்கையும் தெரிவித்து என பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டேன் என தெரிவித்துள்ளேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்களோடு மக்களாக நி்ன்று போராடிய பொது சேகவர்களாகிய எங்களை பொதுமக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நாங்கள் தேர்தலில் .யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. எங்களுக்கு யாரும் ஆதரவு தரவில்லை. ஒரு சில சிறிய அமைப்புகள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்கள் நல கூட்டணியில் பச்சை தமிழகம் கை கோர்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அந்த கூட்டணியில் உள்ள விஜயகாந்த் மக்கள் அச்சத்தை போக்கி விட்டு கூடங்குளம் அணு உலை திட்டத்தை செயல்படுத்தலாம் என தெரிவித்தார். எனவே விஜயகாந்தை நாங்கள் எந்த காரணம் கொண்டும் ஏற்று கொள்ள முடியாது. அவருக்கு முதல்வராகும் தகுதி இல்லை. விஜயகாந்த் இல்லாமல் மக்கள் நல கூட்டணி எங்களை ஆதரித்தால் ஏற்று கொள்வோம் என்றார் அவர்.

English summary
Pachai Tamilagam leader S Udayakumar has slammed Vijayakanth and said that he is not worthy to be a CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X