For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நீட் திணிங்க, CAA மூலம் மக்களை பிரிங்க, தேவை கமிஷன்" இதான் அதிமுக.. பாஜக கோர முகம்.. உதயநிதி சுளீர்

அதிமுக, பாஜகவை விமர்சித்து உதயநிதி ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "நீட்-திணிங்க, CAA-மத அடிப்படையில் மக்களை பிரிங்க, எங்க தேவை கமிஷன் எனும் அடிமை அதிமுகவை பயன்படுத்தி வெறுப்பரசியலின் கோர முகம் காட்டுகிறது பாஜக" என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி நடத்தி வருகிறது. இதில் அக்கட்சியின் உதயநிதி ஸ்டாலின் மிக தீவிரமான ஈடுபாட்டில் இறங்கி வருகிறார்.

அப்போது சிஏஏ குறித்த விளைவுகளை மக்களிடத்தில் எடுத்து சென்றும் வருகிறார்.. "சிஏஏ குறித்த பீதியை அரசியல் கட்சிகள்தான் கிளப்புகின்றன, சிஏஏ-வால் மக்களுக்கு பாதிப்பில்லை என்று ரஜினி சொல்லியிருக்கிறாரே?" என்று செய்தியாளர்கள் உதயநிதியை 3 தினங்களுக்கு முன்பு கேட்டிருந்தனர்.

ஏப்.14-ல் ரஜினிகாந்த் கட்சி உதயம்... ஆகஸ்ட்டில் மாநாடு- 2 அதிமுக சீனியர்கள் தாவல்? ஏப்.14-ல் ரஜினிகாந்த் கட்சி உதயம்... ஆகஸ்ட்டில் மாநாடு- 2 அதிமுக சீனியர்கள் தாவல்?

கட்சி ஆரம்பிக்கட்டும்

கட்சி ஆரம்பிக்கட்டும்

அதற்கு, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர்... அவர் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை... அவரது கொள்கைகள் கூட என்னவென்று தெரியவில்லை... அப்படி இருக்கையில் நான் அவரது கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு பேசுகிறேன்" என்று நெத்தியடியாக பதில் தந்திருந்தார்.

ட்வீட்

ட்வீட்

அன்று ரஜினியை போட்டு தாக்கிய உதயநிதி இன்று அதிமுக, பாஜகவை தன் பாணியிலேயே விமர்சித்துள்ளார். சிஏஏவுக்கு எதிரான திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது.. பொதுமக்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் என அனைவரும் திரளாக வந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டு வருகின்றனர்.. இந்த வெற்றியை குறிப்பிடுகையில் உதயநிதி இவ்வாறு ட்வீட் போட்டு பதிவிட்டுள்ளார்.

பாஜக கோர முகம்

அதில், ‘நீட்-திணிங்க, CAA-மத அடிப்படையில் மக்களை பிரிங்க, எங்க தேவை கமிஷன்' எனும் அடிமை அதிமுகவை பயன்படுத்தி வெறுப்பரசியலின் கோர முகம் காட்டுகிறது பாஜக. ஆனால், CAAக்கு எதிரான கையெழுத்து இயக்க வெற்றி மூலம், தமிழர்கள் சாதி-மத பேதங்களை கடந்தவர்கள் என நிருபித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியாக்கள்

ரோஹிங்கியாக்கள்

மூத்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சிஏஏ என்றால் என்ன என்பது குறித்து விளக்கமாக பேசிய ஒரு வீடியோவினை இணைத்துதான் இந்த பதிவை உதயநிதி போட்டுள்ளார். நாஞ்சில் சம்பத் அந்த வீடியோவில் "40 ஆயிரம் பேர் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டார்கள்.. அவங்களுக்கு பெயர் ரோஹிங்கியாக்கள்.. அந்த ரோஹியாங்களுக்கு இடம் தர வேண்டும் என்பதற்காகவே மியான்மரை சேர்க்கவில்லை.

கமெண்ட்கள்

கமெண்ட்கள்

ஆப்கானிஸ்தானை ஏன் சேர்தே? அது என்ன இந்தியாவின் அண்டை நாடா? பிரிட்டிஷ் இந்தியாவில் ஆப்கானிஸ்தானில் இருந்ததா? அப்பறம் ஏன் சேர்த்தே.. அவங்க வந்ததே அந்த வழியாகத்தான்.. எந்த வழி.. அந்த வழி.. புரியுதா.. இதுதான் சிஏஏ" என்று பாஜகவையும், அதிமுகவையும் விளாசி எடுத்துள்ளார். உதயநிதியின் இந்த ட்வீட்டுக்கும், நாஞ்சில் சம்பத்தின் வீடியோ பதிவிற்கும் சேர்த்து ஆதரவான கமெண்ட்கள் ஏகத்துக்கும் வந்து விழுந்தபடியே உள்ளன.

English summary
udhayanidhi stalin criticized aiadmk, bjp and tweeted about it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X