For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினிகாந்த் ஒரு நடிகர்.. அதனால் அவருக்கு அரசியல் தெரியவில்லை.. கடுமையாக விமர்சித்த உதயநிதி

Google Oneindia Tamil News

Recommended Video

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து

    சென்னை: ரஜினிகாந்த் நடிகராக இருப்பதால் இவருக்கு அரசியல் தெரியவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் 3 ஆவது நாளாக கையெழுத்து இயக்கம் தற்போது நடைபெற்று வருகிறது.

    அது போல் அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் சென்னை லயோலா கல்லூரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார்.

    வெளிநாடு

    வெளிநாடு

    இதனிடையே சென்னை போயல் தோட்டத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்சினை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள். என்பிஆர் அவசியம்தான். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

    ரஜினி

    ரஜினி

    சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்புகிறார்கள். அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார்கள்; குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள் என்றார். பாஜகவின் கண்ணாடி போல் ரஜினி கூறிய கருத்தை தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    கட்டாயப்படுத்தவில்லை

    கட்டாயப்படுத்தவில்லை

    இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் நடிகராக இருப்பதால் ரஜினிகாந்திற்கு அரசியல் தெரியவில்லை. ரஜினி காந்த் அரசியலுக்கு வந்தால் அதுகுறித்து பதில் கூறுகிறேன். ரஜினிகாந்த் நல்ல நடிகர். முதலில் கட்சித் துவங்கி கொள்கைகளை சொல்லட்டும். மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

    விமர்சனம்

    விமர்சனம்

    அவர்கள் தன்னார்வத்துடனே போராட்டத்தில் பங்கேற்கின்றனர் என ரஜினி காந்தை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது போல் உதயநிதி திமுகவில் பொறுப்பேற்ற நாள் முதல் ரஜினிகாந்த் சில விஷயங்களில் விமர்சனம் செய்து வருகிறார் உதயநிதி. பெரியார் விவகாரத்தில் ரஜினி கருத்து தெரிவித்த போதும் ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு நாங்கள் பதில் கூறுவோம். காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்த பின்பு அவர் மன்னிப்பு கோரியது போல, பெரியார் விவகாரத்திலும் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார் என்றார் உதயநிதி

    Take a Poll

    English summary
    Udhayanidhi Stalin says that Rajinikanth is a actor so he doesnot know about politics. After he come to politics i will answer his questions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X