For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமங்களில் தாறுமாறான மின் வெட்டு.. திமுக எம்எல்ஏ புகார்

Google Oneindia Tamil News

சென்னை: கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்துமாறு தமிழக மின்வாரியத்துக்கு அதிமுக அரசு உத்தரவிட்டிருப்பதாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Unannounced power cuts in TN?

தமிழகத்தில் தற்போது பல பகுதிகளில் கடும் வெயில் அடித்து வருகிறது. இடையில் பெய்து வந்த மழை தற்போது வெகுவாக நின்று போய் விட்டது. இந்த நிலையில் பல பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாக புகார்கள் கிளம்பி வருகின்றன.

திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா இதுகுறித்து டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு, கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்துமாறு தமிழக மின்வாரியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. மன்னார்குடியில், நள்ளிரவில் ஒறு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு அமல்படுத்துகிறார்கள்.

வெப்ப நிலை பகல் நேரங்களில் 37 டிகிரி செல்சியஸாக கொளுத்துகிறது. இரவிலோ மின்சாரம் இல்லாமல் மக்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
DMK MLA TRB Raja has charged that TN Govt has asked TNEB to take up unannounced power cuts in rural areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X