For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தின் பின்னணி இதுதான்...

சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்துக்கு காரணம் இதுதான்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை கந்தன்சாவடியில் கட்டடம் சரிந்து விபத்து. பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு.

    சென்னை: சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் அந்த கட்டடத்தை செங்கற்களால் கட்டாமல் ஹாலோ பிரிக்ஸ் கற்களால் கட்டியதே காரணம் என்று கூறப்படுகிறது.

    சென்னை கந்தன்சாவடியில் உள்ள 4 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இது தனியார் மருத்துவமனை கட்டட பணிக்கானது. இதில் பெரும்பாலானோர் வடமாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று மாலை தொழிலாளர்கள் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரம் தாங்காமல் கட்டடத்தின் இரும்பு சாரம் சரிந்து விழுந்தது.

    இடிபாடுகளில்...

    இடிபாடுகளில்...

    சிறிது நேரத்திற்கெல்லாம் கட்டடம் மளமளவென இடிந்து விழுந்தது. கூடவே கான்கிரீட் போடும் இரும்புக் கம்பிகளும் விழுந்தன. இந்த இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    ஒருவர் பலி

    ஒருவர் பலி

    இந்த சம்பவத்தில் 27 பேர் மீட்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்தவர்களில் 5 பேர் நிலைமை மோசமாக உள்ளது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவர் உயிரிழந்தார். கட்டட விபத்து தொடர்பாக கட்டட பொறியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    காரணம் என்ன

    இந்த கட்டடம் சரிந்து விழுந்த விபத்துக்கு காரணம் ஆலோபிரிக்ஸால் கட்டடம் கட்டப்பட்டதுதான் என்று கூறப்படுகிறது. பொதுவாக செங்கற்களால்தான் கட்டடங்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் விலை குறைவாக உள்ள ஹாலோ பிரிக்ஸை கட்டடம் கட்ட பயன்படுத்தியுள்ளனர்.

    ஹாலோபிரிக்ஸ்

    ஹாலோபிரிக்ஸ்

    விபத்துக்குள்ளான இந்த கட்டடம் மட்டும் அல்ல, இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான கட்டடங்கள் ஹாலோ பிரிக்ஸால்தான் கட்டப்படுகின்றன. சுற்றுச்சுவருக்கு மட்டும் ஹாலோபிரிக்ஸ்களை பயன்படுத்தி வந்த காலம் போய் வீட்டையே ஹாலோ பிரிக்ஸ்களால் கட்டுகின்றனர். இதனால் கட்டடமும் விரைவில் கட்டப்படும். நேரமும் பணமும் மிச்சமாகும் என்பதுதான் காரணம். இதுதொடர்பாக அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

    English summary
    An under construction building at Chennai Kandhachavadi is made up of hollow bricks. Most of the buildings are built by hollow bricks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X