For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயமான கடற்படை விமானத்தின் கதி என்ன?... 4 நாட்களாக தேடியும் பலனில்லை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீர்மூழ்கி கப்பல், கிளைடர், செயற்கைக்கோள் என பல வழிகளில் தேடியும் மாயமான இந்திய கடலோர காவல்படை விமானத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் விடாமுயற்சியோடு கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களும், தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் நவீன படகுகளும் 5வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

இஸ்ரோ செயற்கைகோள்கள் கடற்பரப்பில் சிக்னல்களை அனுப்பி விமானத்தை தேடும் பணி நடந்தது. செயற்கைகோள் ஆய்விலும் விமானத்தை பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை என கடலோர காவல்படை ஐ.ஜி., கூறியுள்ளார்.

Underwater Search to Set Off Tonight to Trace Missing Dornier

தமிழக கடல் பகுதியில்ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு படையின்'டார்னியர்' விமானம்கடந்த 8ம் தேதி இரவு மாயமானது. விமானத்தில், கடலோரக் காவல்படை விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி மற்றும் சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேர் இருந்தனர்.

96 மணிநேர தேடுதல் வேட்டை

நடுவழியில் காணாமல் போன கடலோர காவல்படையின் விமானத்தை தேடும் பணியில், கடலோர பாதுகாப்பு படை - கடற்படை இணைந்து 12 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் நேற்று வரை96 மணிநேரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது; 60 மணி நேரத்திற்கும் மேல் விமானங்கள் மூலம் தேடுதல் நடந்துள்ளது. இந்த தேடுதல் வேட்டையில் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு மாயமான விமானத்தைதொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது

ஸ்கூப் டைவிங்

காணாமல் போன விமானம் புதுச்சேரி கடல் பகுதியில் இருந்துகடலுார் மாவட்டம் சிதம்பரம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தகாரைக்கால் கடல் பகுதியில் விழுந்து இருக்கலாம் எனநம்பப்படுகிறது.அதனால்ஏ.டி.வி.வாகனம்; 'கிளைடர்' ரக விமானம்; 'ஸ்கூப் டைவிங்' வீரர்கள் அரவிந்த்அய்யனார் ஆகியோர் மூலம்புதுச்சேரிகடலுார் இடையே கடலில்10 முதல்20 மீ.ஆழம் வரை சென்று தேடுகின்றனர்.

எண்ணெய் படலம்

காரைக்கால் அருகேகடல் பரப்பில் எண்ணெய் படலம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து கடலோர காவல் படையினர்அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்; ஆனால்அந்த எண்ணெய் படலம்விமானம் எரிபொருள் அல்ல என்பது ஆய்வில் தெரியவந்தது.

சதுப்புநிலக்காடுகளில் தேடுதல்

சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில்5,000 ஏக்கருக்கும் மேல் உள்ள சதுப்புநிலக் காடுகளில் நேற்று'பாரா மோட்டார்' மூலம் சதுப்பு நிலக் காடுகளுக்குள் பறந்து சென்று தேடும் பணி நடந்தது. ஆட்கள் உயிரோடு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாக் ஜலசந்தி

இதனிடையே கன்னியாகுமரி கடல் பகுதியிலும்தேடுதல் வேட்டை நடத்த கடலோர காவல் படையின் கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன்படி வியாழக்கிழமையன்று காலை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்துமூன்று அதிநவீன ரோந்து படகுகள் மூலம்கூட்டப்புளி இடிந்தகரைஉவரி கடல் பகுதியில் தேடுல் பணி நடந்தது. கன்னியாகுமரியில் இருந்து12 கடல் மைல் தொலைவிலும் இந்த தேடுதல் பணி இன்று நடக்கிறது.

தாயார் வேண்டுகோள்

இந்த நிலையில் விமானத்தில் இருந்த எனது மகன் உட்பட 3 பேரும் உயிருடன் திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள் என்று சென்னை வீரர் சுபாஷின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டுக்கான பணியில் நாட்டுக்கான பணியில் ஈடுபட்டிருக்கும் அவனுக்கு ஒன்றும் ஆகாது. நிச்சயம் திரும்பி வருவான். அவனுக்காக எங்கள் குடும்பத்தில் உள்ள அனை வரும் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். சுபாஷ் சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர். அவ ருக்கு தீபலட்சுமி(29) என்ற மனைவியும், இஷான் என்ற ஆண்குழந்தையும் உள்ளனர்.

English summary
The underwater search to locate Indian Coast Guard's (CG) missing Dornier and its three crew would start on Friday night assisted by Naval submarine INS Sindhudhwaj and survey ship INS Sandhayak, equipped with sonar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X