For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறக்க முடியுமா வேலூர் கார்த்தியாயினியை.. இவர் யாரென்று தெரிகிறதா?

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி பாஜகவில் போய் இணைந்துள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இவர் செயல்பட்ட விதத்தை வேலூர் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படி ஒரு அதிரடி அரசியலை செய்தவர் கார்த்தியாயினி.

இப்போது எந்த கோஷ்டி பக்கம் போவது என்று தெரியாமல் குழம்பிப் போய் பாஜகவில் இணைந்து விட்டார். இவரது அதிமுக அரசியலில் மறக்க முடியாத பாடத்தை சென்னை உயர்நீதிமன்றம் கற்றுக் கொடுத்தது நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவகாரத்தில்.

2011ல் மேயரானவர்

2011ல் மேயரானவர்

வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனையாளரும் கூட.

முதல் மேயர்

முதல் மேயர்

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வேலூர் மேயர் என்ற பெருமையும் கார்த்தியாயினிக்கு உண்டு. ஆனால் அந்தப் பெருமைகளையெல்லாம் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின்போது சிதறடித்து விட்டார் கார்த்தியாயினி.

குன்ஹா தீர்ப்பை விமர்சித்து தீர்மானம்

குன்ஹா தீர்ப்பை விமர்சித்து தீர்மானம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தியாயனி.

ஜெ.விடம் பெயர் வாங்குவதற்காக

ஜெ.விடம் பெயர் வாங்குவதற்காக

ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க அதிமுகவினர் நடத்திய ஜால்ரா போராட்டங்களிலேயே மிகவும் ஷாக்கான விஷயம் இதுதான். கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும், கொடும்பாவி கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

இன்று பாஜகவில்

இன்று பாஜகவில்


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கார்த்தியாயினியின் செயல்பாடுகள் அமைதியாகி விட்டன. எந்தக் கோஷ்டியில் செயல்படுவது என்று தெரியாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது பாஜகவில் போய்ச் சேர்ந்துள்ளார்
ர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்தியாயினி வெற்றி பெற்றார். வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்தியாயினி 1,81,027 வாக்குகளைப் பெற்றார். 2வது இடத்தைப் பிடித்த திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி 82,119 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் ராஜேஸ்வரியை 98,888 வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்தியாயினி வீழ்த்தி வேலூர் மாநகராட்சியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக உருவெடுத்துள்ளார்.

English summary
Former Vellore mayor Karthiyayini has joined BJP. She was condemned by the Madras HC for her actions against Justice Cunha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X