For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜிவ் கொலை.. சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆவணங்களை கேட்கிறது மத்திய அரசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் ஆகிறது- வீடியோ

    டெல்லி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ள பேரறிவாளன் உள்ளிட்டோர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தமிழக அரசிடம் கேட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதிகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.

    Union government asking details Rajiv killers

    25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் வாடுவதை கருத்தில் கொண்டு, கடந்த 2016ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

    இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது.

    பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 19 வயதில் சிறைக்கு சென்ற அவர், 27 வருடங்களை சிறையில் கழித்துள்ளார். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகிவரும் நிலையில், மத்திய அரசு திடீரென தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Union government asking details about Perarivalan case, as he completes 27 years in jail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X