For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர மாட்டோம்னு நாங்கள் சொல்லவேயில்லையே.. நிர்மலா சீதாராமன் பரபர பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர மாட்டோம் என நாங்கள் சொல்லவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம் குறித்து சென்னை திநகரில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்ல முடியாது

அவ்வாறு அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம். அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல.

ஷீரடி முழுவதும் பந்த்.. கடைகள் அடைப்பு.. ஆனா சாய்பாபா கோயில் திறப்பு.. அலைமோதும் பக்தர்கள் ஷீரடி முழுவதும் பந்த்.. கடைகள் அடைப்பு.. ஆனா சாய்பாபா கோயில் திறப்பு.. அலைமோதும் பக்தர்கள்

உண்மைக்கு புறம்பாக

உண்மைக்கு புறம்பாக

குடியுரிமை சட்டம் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதனால் யாருக்கும் பிரச்சினை இல்லை. குடியுரிமை சட்டம்குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி யாரையும் கொந்தளிப்புக்குள்ளாக்க வேண்டாம்.

சம்பந்தம் இல்லை

சம்பந்தம் இல்லை

யாருடைய குடியுரிமை பறி போகும் என கருதுகிறார்களோ அவர்களிடம் தெளிவாக விளக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய இரண்டிற்கும் குடியுரிமை சட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை.

முகாம்களில்

முகாம்களில்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கை, வங்கதேச அகதிகளுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

நிர்மலா கருத்து

நிர்மலா கருத்து

அந்த முகாம்களுக்கு சென்று பார்த்தால் கண்ணீரை வரவழைக்கிறது. அஸ்ஸாமில் அமல்படுத்தப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படாது. அது நீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கிறது என நிர்மலா தெரிவித்தார்.

English summary
Finance Minister Nirmala Sitharaman says that Citizenship Amendment act is not snatching anyone's Citizenship. There is no basic amenities in Srilankan and Bangladesh refugees camps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X