For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓடிரு.. ஓடிரு.. கிருஷ்ணகிரி அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா!

சாட்டையால் அடித்து பெண்களுக்கு பேய் ஓட்டப்பட்ட நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா!

    கிருஷ்ணகிரி: ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர் அந்த கோயிலின் முன்உள் மைதானத்தில்.

    ஆடு, கோழிகளின் இறைச்சலில் ஏராளமான பெண்கள் தலைவிரிகோலமாக அமர்ந்திருந்தனர். சிலர் மண்டியிட்டபடி ஆக்ரோஷமாக காணப்பட்டனர். அனைவருமே மண்டியிட்டு, கைகளை தலைக்குமேல் உயர்த்தி அமர்ந்திருந்தனர்.

    Unique festival near Krishnagiri

    நீளமான சாட்டை ஒன்றுடன் கோவில் பூசாரி அங்கு வந்தார். வேகமாக சுழற்றியடி அந்த பெண்களின் கைகள் மீது விளாசினார். சில பெண்கள் சாட்டையடியை பொறுத்துக் கொண்டனர், சிலர் வலி தாங்காமல் அலறியடித்து ஓடினர்.

    கிருஷ்ணகிரி அருகே முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் மாவிளக்கு ஊர்வலத்தில் பேய் விரட்டும் விநோத காட்சிகள்தான் இவையெல்லாம்.

    கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமேலுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில். இந்த வருடத்திற்கான பங்குனித்திருவிழா இங்கு வெகு விமர்சியாக நடைப்பெற்றது.

    இதனை முன்னிட்டு, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் காப்பு கட்டுதல், மற்றும் மண்டல பூஜைகள், அம்மன் திருக்கல்யாணம், கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட பல்வேறுபூஜைகள் நடைப்பெற்றது,

    இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான மாவிளக்கு ஊர்வலம் மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடைப்பெற்றது. இதில் சின்ன மேலுப்பள்ளி, மேல்பட்டி , காமாராஜர் புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்ளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் மா எடுத்து வந்தனர்

    பின்னர் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுத்தருளி பக்தர்களுக்குள் காட்சியளித்தார், இதணைத் தொடர்ந்து பெண்கள் தாலிபாக்கியம் வேண்டி மாவிளக்குகில் தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.

    பின்னர் அம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன் 200-க்கு மேற்பட் ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அவ்வாறு பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை சமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கோவில் முன்பாக பேய் விரட்டும் வினோத நிகழ்வு நடைப்பெற்றது. இதில் பெண்கள் மட்டியிட்டு வரிசையாக அமர்ந்திருக்க அவர்களின் கைகளின் மேல் முத்துமாரியம்மன் கோவில் பூசாரி சாட்டையால் ஓங்கி அடித்து பேய்களை விரட்டினார்.

    இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இந்த வினோத நிகழ்ச்சிகளுக்கு மனித உரிமை அமைப்பினர் பலர் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    A strange event took place at Arulmigu Muthuramaniyan temple in Chinnameluppalli village near Krishnagiri. The ladies climbed in a row, and the priest raised their hands on their hands and beat the demons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X