For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமாரசாமிக்கும்.. சர்மாவுக்கும் 6 வித்தியாசம் கண்டுபிடிங்க பார்ப்போம்!!

Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குமாரசாமிக்கும், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மகேஷ் சந்திர சர்மாவுக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்கும் போல.

ஆளுக்கு ஒரு சப்ஜெக்ட்டை கையில் எடுத்துக் கொண்டு தாறுமாறு தக்காளிச் சோறாக்கி விட்டு ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர்.

இருவரையும் விமர்சிக்காத இந்திய வாய்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இருவரும் தங்களது பதவிக்காலத்தின் இறுதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுப் போயுள்ளனர்.

குமாரசாமி கணக்கு

குமாரசாமி கணக்கு

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தப்புத் தப்பாக கணக்குப் போட்டு ஜெயலலிதா உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்து அதிர வைத்தவர் குமாரசாமி. காந்தி கணக்கு போய் குமாரசாமி கணக்கு என்று புதிதாக ஒரு அம்சத்தை இந்தியர்களின் வாழ்வில் சேர்த்தவர் கு.சாமி.

கோமாதா சர்மா

கோமாதா சர்மா

பசுக்கள் குறித்து ஒரு விஞ்ஞானி ரேஞ்சுக்கு விலாவாரியாக கருத்துக்களைச் சொன்ன பெருமைக்குரியவர் ராஜஸ்தான் ஹைகோர்ட் நீதிபதியாக இருந்த மகேஷ் சந்திர சர்மா.

என்னா ஒற்றுமை

என்னா ஒற்றுமை

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த குமாரசாமி ஓய்வு பெறுவதற்கு முன்பு அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையானது. அதேபோலத்தான் நீதிபதி சர்மாவும் ஓய்வு பெற்ற அன்று பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

அவருக்கு கணக்கு.. இவருக்கு அறிவியல்

அவருக்கு கணக்கு.. இவருக்கு அறிவியல்

குமாரசாமி கணக்கில் தப்பு செய்தார் என்றால் கோமியம் பற்றி வித்தியாசமாகவும், மயில் பற்றி வினோதமாகவும் கூறி அறிவியலைக் காலி செய்தவர் சர்மா.

சர்மாவுக்கும், குமாரசாமிக்கும் இப்படி ஒரு நூதன ஒற்றுமை இருப்பது ஆச்சரியம்தான்.

English summary
Both Justice Kumaraswamy and Justice Sharma have very unique similarities between themselves. Here is a look.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X