For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்மொழி இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகும் உ.பி. மாணவர்கள் நீட்-ல் 60% தேர்ச்சி பெற்ற அதிசயம்!

இந்தியிலேயே தேர்ச்சி பெற முடியாத உ.பி. மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்திருக்கிறது அதிசயம் பாருங்கள்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா?- வீடியோ

    சென்னை: தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது அதிர்ச்சியைத் தருகிறது.

    கல்வியைப் பொறுத்தவரையில் உத்தரப்பிரதேசத்தின் நிலைமை படுமோசம். அம்மாநிலத்தில் தாய்மொழியான இந்தி கட்டாயப் பாடம்.

    UP Students Fail in Hindi; but 60% Pass in NEET

    ஆனால் தாய்மொழி இந்தியையே ஒழுங்காக படிப்பதில்லை அம்மாநில மாணவர்கள். கடந்த ஆண்டு 7.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்கள் இந்தியில் பெயிலாகி இருந்தனர்.

    நடப்பாண்டில் 11 லட்சம் மாணவர்கள் தாய்மொழிப் பாடமான இந்தியில் பெயிலாகி உள்ளனர். ஆனால் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 60% உத்தரப்பிரதேச மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனராம்.

    மொத்தம் 1,28,329 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 76778 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனராம். தாய்மொழிப் பாடத்தை கூட ஒழுங்காக படிக்க முடியாத கல்விச் சூழல் உள்ள மாநிலமாக இருக்கிறது உத்தரப்பிரதேசம்.

    அப்படிப்பட்ட கல்விச் சூழல் கொண்ட மாநிலம், கல்வியில் தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழகத்தைவிட அதிக விழுக்காடு தேர்ச்சி பெற்றுவிட்டது என நீட் தேர்வு முடிவுகள் தெரிவிப்பதை எப்படித்தான் நம்புவது?

    English summary
    According to UP Secondary education department figures 11 Laksh Students Fail in their Mother Tongue exam. At the Same time UP Students 60% pass in NEET Exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X