For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க ஆயுத கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் உத்தரவு ரத்து

By Mathi
Google Oneindia Tamil News

US ship
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் பாதுகாப்பு கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த அக்டோபர் 11-ந் தேதி மடக்கி பிடித்தனர். அந்த கப்பலில் இருந்த 35 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து, நவீன துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் 35 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கியூ பிரிவு போலீசார் இதனை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் 90 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்பதால் ஜாமீன் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கினார்.

English summary
The Principal Sessions Court cancelled the conditional bail granted by a lower court to 35 crew members of a private US ship arrested on charges of carrying weapons illegally and straying into Indian waters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X