For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலை கடத்தல் வழக்கை தமிழக அரசு சிபிஐயிடம் ஒப்படைத்தது ஏன்? வைகை செல்வன் அடடே விளக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரபல மலையாள பாடகியும், நடிகையுமான மஞ்சுஷா மோகன்தாஸ் சாலை விபத்தில் பலி- வீடியோ

    சென்னை: சிலை கடத்தல் வழக்கை ஏன் சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது என்பது குறித்து அதிமுகவின் வைகை செல்வன் அளித்த பதிலை பாருங்கள்.

    வைகை செல்வன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி கூறுகையில், ஐஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படவில்லை. ஒரு வருடம் ஆகியும் விசாரணை அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யவில்லை. என்ன விசாரணை நடைபெறுகிறது என்பதை அரசுக்கோ, மேலதிகாரிகளுக்கோ அவர் தெரிவிக்கவில்லை.

    Vaigai Selvan of AIADMK defends idol theft case handover to CBI

    அரசே தானாக முன்வந்து அவரிடம், வழக்கு விசாரணை விவரங்களை கேட்டாலும் அவர் சொல்லவில்லை. தனியான ஒரு அமைப்பை போல அவர் நடந்து கொண்டார். எனவேதான் அவர் விசாரணையில் அரசுக்கு நம்பிக்கையில்லை என்று தமிழக அரசு கூறி சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது.

    விரைவாக விசாரணை நடந்து உண்மை வெளியே வர வேண்டும் என்பதற்காகத்தான், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆனால், அரசில் உயர் இடத்தில் இருப்பவர்களும், உயர் அதிகாரிகளுமே சிலை கடத்தலில் தொடர்புடையவர்களாக இருப்பதாக பொன்.மாணிக்கவேல் விசாரணை குழு சந்தேகிக்கும் நிலையில், அதைப்பற்றி முன்கூட்டியே எப்படி அரசிடம் சொல்வது, அப்படி சொன்னால் விஷயம் லீக்காகி குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு ஏற்படுமே என்று கேட்கிறார்கள், ஆன்மீகவாதிகள்.

    English summary
    Vaigai Selvan of AIADMK defends Tamilnadu government decision to hand over idol theft case to CBI.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X