For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ஐஐடியில் சமஸ்கிருதம் திணிப்பு: வைகோ கண்டனம்

சென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடி விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத பாடல்- வீடியோ

    சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார். அத்துடன் அதற்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தேசிய கீதம்

    தேசிய கீதம்

    இந்த விழாவில் இறைவணக்கமாக தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்திலான கணபதி பாடல் இசைக்கப்பட்டது. வழக்கமாக மத்திய அரசு அலுவலகங்களில் இறை வணக்கத்துக்கு பதிலாக தேதிய கீதம்தான் இசைக்கப்படும்.

    தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்

    தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்

    ஆனால் இந்த விழாவில் வேண்டுமென்றே சமஸ்கிருத பாடல் திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், சென்னை ஐஐடியில் சமஸ்கிருதம் பாடல் இசைக்கப்பட்டது தவறு.

    நடவடிக்கை தேவை

    நடவடிக்கை தேவை

    இந்த பாடலை ஒலிபரப்ப காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிமுக சார்பில் எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.

    எந்த சம்பந்தமும் இல்லை

    எந்த சம்பந்தமும் இல்லை

    இதுகுறித்து ஐஐடி கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், விழாக்களின் போது எந்த பாடலை இறைவணக்கமாக ஒலிபரப்புவது என்பதை மாணவர்கள்தான் முடிவெடுப்பர். இந்த சமஸ்கிருதத்திலாலான கணபதி பாடலையும் அவர்கள்தான் ஒலிபரப்பினர். இதில் அதிகாரிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.

    English summary
    Vaiko condemns for Central Government for imposing Sanskrit in Chennai IIT. He also demands for take action against the officials who is responsible for this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X