For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராம் ஜெத்மலானி 120 ஆண்டுகள் வாழ வைகோ வாழ்த்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ராம்ஜெத் மலானி 120 ஆண்டுகள் நோய் நொடியின்றி நன்றாக வாழ வேண்டும். அவரது 100வது பிறந்தநாள் விழாவை நாம் சென்னையில் கொண்டாட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக பிரபல வக்கீல் ராம்ஜெத் மலானி உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். இதன் காரணமாக 3 பேரும் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பினார்கள். அவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து ராம்ஜெத் மலானிக்கு தமிழர் அமைப்புகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தன.

ம.தி.மு.க. வழக்கறிஞர் பேரவையில் ராம்ஜெத்மலானிக்கு இன்று காலை சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மகாலில் பாராட்டு விழா நடைபெற்றது.

ராம் ஜெத்மலானிக்கு பொன்னாடை

ராம் ஜெத்மலானிக்கு பொன்னாடை

விழாவுக்கு வந்த ராம் ஜெத்மலானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வைகோ பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

விழாவில் ராம்ஜெத் மலானியை பாராட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அவர் கூறியதாவது:-

தூக்கு தண்டனை குறைப்பு

தூக்கு தண்டனை குறைப்பு

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதில் ராம் ஜெத்மலானிக்கு முக்கிய பங்கு உண்டு.

பணம் வாங்கவில்லை

பணம் வாங்கவில்லை

இந்த 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார்.3 பேரின் உயிரைக் காப்பாற்ற அவர் பணம் வாங்காமல் வாதாடியுள்ளார். அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

கடமைப் பட்டுள்ளோம்

கடமைப் பட்டுள்ளோம்

அவருக்கு தமிழ்ச்சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. ராம்ஜெத்மலானி 120-ம் ஆண்டுகள் நோய் நொடியின்றி நன்றாக வாழ வேண்டும். அவரது 100-வது பிறந்தநாள் விழாவை நாம் சென்னையில் கொண்டாட வேண்டும் என்றார் வைகோ.

மதிமுகவினர் பங்கேற்பு

மதிமுகவினர் பங்கேற்பு

விழாவில் மல்லை சத்யா, பகுதி செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி, சட்டத்துறை செயலாளர் ஜூ.தேவதாஸ், கே.கழககுமார், சு.ஜீவன், வக்கீல் டி.ஜ.தங்கவேல், மதுரை டாக்டர் பி.சரவணன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் ஓ.சோமு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Senior advocate Ram Jethamalani, who appeared in the Supreme Court for three Rajiv Gandhi assassination case convicts in their plea for commutation of death sentence has felicitated by the MDMK today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X