For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் - அச்சுதானந்தன், உம்மன் சாண்டியிடம் ஆதரவு திரட்டிய வைகோ

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மேற்கொள்ள உள்ள வைகோ கேரளாவில் முன்னாள், இந்நாள் முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அச்சுதானந்தன், உம்மன் சாண்டியிடம் ஆதரவு திரட்டிய வைகோ

    திருவனந்தபுரம்: நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ள வைகோ கேரளாவில் முதல்வர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து ஆதரவு அளிக்கும்படி திரட்டினார்.

    நியூட்ரினோ ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் அம்பரப்பர் மலைப்பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு எதிராக மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், சூழலியல் அமைப்புகளும் போராடி வருகின்றன.

    பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    விழிப்புணர்வு நடைபயணம்

    விழிப்புணர்வு நடைபயணம்

    இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டும் வகையில், மதுரையில் இருந்து வரும் 31ஆம் தேதி நடைபயணம் தொடங்குகிறார். ஏப்ரல் 10ஆம் தேதி வரை இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
    இந்த நடைபயணத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் கேரளா சென்றுள்ளார் வைகோ.

    அச்சுதானந்தனுடன் சந்திப்பு

    அச்சுதானந்தனுடன் சந்திப்பு

    கேரள மாநில நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர், முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனை நேற்று மாலை 5 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவையும் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

    ஆதரவு கொடுங்க

    ஆதரவு கொடுங்க

    இன்று முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டியை சந்தித்து தனது நடைபயணத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். நியூட்ரினோ திட்டத்திற்காக பாறைகளை உடைப்பதால் அருகில் உள்ள இடுக்கி அணையும் முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும் என வைகோ எச்சரித்தார்.

    அணு ஆயுத போர்

    அணு ஆயுத போர்

    அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்து, செயற்கை நியூட்ரான்கள், இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும். இங்கிருந்து, உலகில் எந்த நாட்டில் உள்ள அணு ஆயுதங்களையும் வெடிக்கச் செய்யலாம்; செயல் இழக்கச் செய்யலாம். உலகில் அணு ஆயுதப் போர் எந்தப் பகுதியில் மூண்டாலும், தேனி மாவட்டம் அம்பரப்பர் ஆய்வகம்தான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகும். கேரள மாநிலம், தென் தமிழ்நாடு அழிந்து போகும்.

    மார்ச் 31ல் நடைபயணம்

    மார்ச் 31ல் நடைபயணம்

    இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டுவதற்காக, மார்ச் 31 ஆம் தேதி காலையில், மதுரையில் இருந்து விவசாயிகள், இளைஞர்கள், தொண்டர்களோடு நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், வைகோ நடைபயணம் தொடங்குகிறார். வழிநெடுகிலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து, ஏப்ரல் 9 ஆம் தேதி கம்பத்தில் நடைபயணம் நிறைவு பெறுகின்றது.

    வைகோ அழைப்பு

    வைகோ அழைப்பு

    மார்ச் 31 ஆம் நாள் மதுரையில் நடைபயணத் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என அச்சுதானந்தனுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்தார். இப்பிரச்சினை குறித்த நீண்ட விளக்கக் கடிதத்தையும் வைகோ தந்தார். இந்த நிகழ்வில் அச்சுதானந்தன் கலந்து கொள்கின்ற வாய்ப்பு உள்ளது என்று வைகோ தெரிவித்தார். ரமேஷ் சென்னிதலா ஏப்ரல் 9 ஆம் தேதி கம்பம் நிறைவு நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதி அளித்துள்ளதாக வைகோ கூறியுள்ளார்.

    English summary
    MDMK General Secretary Vaiko today met CPI(M) Veteran leader V S Achuthanandan to seek his support against the Centre's proposed India-based Nutrino Research Centre in Tamil Nadu's Theni District.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X