For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிர்கள்... மேட்டூர் அணை நீரை முறை வைக்காமல் திறக்க வைகோ வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பாசன பகுதிகளில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற, முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

''காவிரி பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவதற்குப் பதிலாக, நீர் இருப்புக் குறைவைக் காரணம் கூறி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதிதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

vaiko

மேட்டூர் அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டால்தான், காவிரியில் 10,650 கன அடி நீரும், வெண்ணாற்றில் 9,370 கன அடி நீரும் விவசாயிகளின் பயிர் சாகுபடிக்குப் போய்ச் சேரும்.

மீதி 4 ஆயிரம் கன அடி நீர் குடிநீருக்காகச் சென்றுவிடும். ஆனால், தற்போது 12 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கு வெறும் 13 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.

அதுவும் முறை வைத்துத் திறக்கப்படுவதால், கடை மடை விவசாயிகளுக்கு முழுமையான பயன் அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் மழையை நம்பி நேரடி விதைப்பு முறையில் விதைகளைத் தெளித்தனர். அவை முளைத்து வரும் பருவத்தில் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், காவிரியில் சாதாரண அளவான 10,650 கன அடி நீரையும், அதைப் போன்று வெண்ணாற்றில் 9,370 கன அடி நீரையும் முறை வைக்காமல் தொடர்ச்சியாக திறக்கப்பட்டால் தான் பயிர் சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, காவிரி கடை மடை பகுதிகளில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள பயிர்களைக் கருகாமல் காப்பாற்றுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து முறை வைக்காமல் தொடர்ச்சியாக 23 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Vaiko requested to free flow water from mettur dam for delta districts irrigation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X