For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே அமைக்காது- வைகோ திட்டவட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே அமைக்காது என்று வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அருகதை அற்றவர்... வைகோ ஆவேசம்

    மதுரை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே அமைக்காது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. வாரியத்தை அமைக்காத மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டது.

    Vaiko says Cauvery board will not be formed by Centre

    இந்நிலையில் காவிரி மீட்பு உரிமைக்கான நடைப்பயணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கியுள்ளார். காவிரி வாரியத்துக்காக அவரது மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் நேற்று விருதுநகரில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

    80 சதவீத தீக்காயங்களுடன் அவரை மீட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த செய்தியால் வைகோ மிகுந்த துயரம் அடைந்தார்.

    சரவணனை காண்பதற்காக மதுரை வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது.

    காவிரி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாறினால்தான் தீர்வு. காவிரிக்காக யாரும் தீக்குளிக்க கூடாது என்று வைகோ உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    MDMK General Secretary Vaiko says that Cauvery board will not be formed else this was changed to Constitutional session bench.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X