For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது..: வைகோ

By Mathi
|

திண்டுக்கல்: நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் ம.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருகிற 8-ம் தேதி சென்னை வண்டலூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்தி மோடி கலந்து கொண்டுபேசுகிறார்.

இதற்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.

Vaiko says Modi wave blowing across nation

திண்டுக்கல் திருப்புமுனை

தமிழ்நாட்டில் இந்த கூட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார். அதனை தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி பேசும்போது, தமிழக அரசியல் வரலாற்றில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. திண்டுக்கல் என்றதும் நினைவுக்கு வரும் கோட்டை திப்புசுல்தானின் வெற்றியை பறைசாற்றும்.

பல வெற்றிகளை திருப்பு முனையாக்கி தந்த சான்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல்லில் அரசியலில் அடித்தளம் அமைக்கப்பட்டது.

அந்த காலத்தில் திராவிட பாரம்பரிய தொண்டர்கள் தன்னலம் இன்றி உழைத்தவர்கள். ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு தேர்தல் பணியாற்றுவார்கள்.

முன்பெல்லாம் நாங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போது காலையில் இட்லி, மதியம் ரசம் சாதம் அல்லது தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டுவிட்டு தேர்தல் பணியாற்றுவோம்.தேர்தல் ஆணையத்தால் தற்போது போல நெருக்கடிகள் கிடையாது.

எந்த நேரம் வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம். தொண்டர்களும் சுறுசுறுப்பாக தன்னலம் இன்றி தேர்தல் களத்தில் இருப்பார்கள். இதுபோன்ற தொண்டர்களை பார்த்து அப்போதைய முதல்வர் பக்தவச்சலமே வியந்து பாராட்டுவார். இதுபோன்ற அர்ப்பணிப்பு மற்றும் தன்னலம் இல்லா உணர்வு மணமக்களிடம் இருக்கவேண்டும்.

மதிமுக பொதுக்குழு

பிப்ரவரி 4-ந்தேதி ம.தி.மு.க சார்பில் பொதுக்குழு நடைபெறும். அப்போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்தியாவில் மோடி அலை வீசுகிறது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்கு ம.தி.மு-.க தொடர்ந்து குரல் கொடுக்கும்.

மேலும் சமூகநீதி, சமுதாய நீதி, சிறுபான்மையினர் பாதுகாப்பு, ஜனநாயக பாதுகாப்பு போன்றவற்றிற்காக தொடர்ந்து பாடுபடும். ஊழலுக்கு எதிராகவும், தமிழக வாழ்வாதார பிரச்சினைகளான முல்லைபெரியாறு, காவிரி, மீனவர் நலன் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து எந்த காலத்திலும் பின்வாங்க மாட்டோம்.

இலங்கை இனப்படுகொலை

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இலங்கை அரசு மட்டுமின்றி மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும் தான் காரணம். இந்த அரசு ஒழிக்கப்பட வேண்டும்.

பிப்ரவரி 26-ந்தேதி உலகதமிழர்களுக்கான குரல் எழுப்பும் நாளாகும். இந்த நாளில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் 65 நாடுகள் நீதிகேட்டு குரல் எழுப்பவேண்டும். சாதி, மத அரசியல் கடந்து அனைவரும் இதில் தங்கள் கருத்தை பதிவு செய்யவேண்டும்.

அப்போது இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலுக்கு விசாரணை, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் பதிவு செய்யவேண்டும். இலங்கை தமிழர்களுக்காக சிந்திய ரத்தம் நிச்சயம் வீண்போகாது.

இவ்வாறு வைகோ கூறினார்.

English summary
MDMK general secretary Vaiko asserting there is a ‘Modi wave’ in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X