For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது : வைகோ

காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது என்று வைகோ பேசியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

மதுரை : காவிரி விவகாரத்தில் தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

Vaiko slams Cauvery Management Board is with no Power

மேலும், காவிரியில் புதிய் அணைகள் கட்டக்கூடாது, பாதுகாப்பிற்கு மத்திய ரிசர்வ் படை வர வேண்டும், நீரை திறந்துவிடும் அதிகாரம் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு அதிகாரமும் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உருவாகி இருக்கிறது.

இது தமிழர்களை மீண்டும் வஞ்சிக்கும் முயற்சி. இதற்கு உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விற்கு செல்ல வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க வேண்டாம்.

காவிரியில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என்று தமிழக சட்டசபையில் முதல்வர் அறிவித்து இருப்பதும் மிகவும் மோசமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
Vaiko slams Cauvery Management Board is with no Power. MDMK General Secretary Vaiko says that, TN Government should go appeal on Constitutional Bench .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X