For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் கடைசி வரை மக்களுக்காக போராடினார்.. இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் வைகோ பேச்சு

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் பேசிய வைகோ பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து பேசினார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் பேசிய வைகோ பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து பேசினார். பெரியார் வாழ்நாள் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பிறந்தநாள் விழாவை சென்னை வேலப்பன்சாவடியில் கோலாகலமாக கொண்டாடினார். தமிழ்நாட்டில் இருக்கும் பல முக்கிய கட்சிகள் இதில் கலந்து கொண்டன.

Vaiko talks about Periyar in EVKS Elangovan birthday celebration

இந்த விழா முழுக்க முழுக்க மதசார்பற்ற காட்சிகளின் விழா போல நடைபெற்றது. மத பிரச்சனைகளுக்கு எதிராக பலரும் இதில் பேசினார்கள். முதலில் பேசிய வைகோ பெரியார் குறித்து பேசினார். அதற்கு அடுத்து பேசிய ஸ்டாலினும் பெரியார் குறித்து புகழந்து பேசினார்.

வைகோ அதில் ''பெரியாரும் அறிஞர் அண்ணாவும் மக்களுக்கு கடுமையாக போராடினார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தெருத்தெருவாக போராடினார்கள். தங்களது கடைசி மூச்சு வரை பெரியார் தன்னுடைய கொள்கைகளில் இருந்து மாறாமல் போராடினார்'' என்று குறிப்பிட்டார்.

மேலும் பெரியாருக்கும், அம்பேத்காருக்கும் இடையில் இருக்கும் நட்பு குறித்தும் பேசினார். பெரியார் அம்பேத்காரின் எழுச்சி மிக போராட்டங்களில் முக்கிய காரணியாக இருந்தார். அம்பேத்காரின் போராட்டங்களுக்கு தமிழகத்தில் சிறந்த குரலாக பெரியார் விளங்கினார் என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அதேபோல் இந்த விழாவில் முழுக்க முழுக்க பெரியார் குறித்து பலரும் பேசினார்கள். இந்த விழா பெரிய அளவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vaiko talks about Periyar in EVKS Elangovan birthday celebration. He said Periyar has worked for backward people in his whole life. He also talked about the relationship between Periyar and Ambedkar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X