For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேக நிழல் படிந்துள்ளது.. வைகோ

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேக நிழல் படிந்திருப்பதாக வைகோ விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேக நிழல் படிந்திருப்பதாக வைகோ விமர்சித்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ அண்மையில் வெளியானது.

Vaiko urges Governor Banwarilal purohit to resign

இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளநருக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து ஆளுநர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேக நிழல் படிந்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் நிர்மலா தேவி விவகாரத்தில்
ஆளுநரே விசாரணை குழு அமைத்தால் உண்மை வெளிவராது என்றும் வைகோ கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். பல்வேறு புகார்களுக்கு ஆளாகி உள்ள பன்வாரிலால் தமிழக ஆளுநராக நீடிப்பது அவமானம் என்றும் வைகோ சாடியுள்ளார்.

சூப்பர் முதல்வர் போன்று ஆளுநர் புரோகித் தம்மை காட்டிக்கொள்வது கடும் கண்டனத்துக்குரியது என்றும் வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko condemns governor Banwarilal purohit. Vaiko urges Governor Banwarilal purohit to resign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X