For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

142 அடியை தொட்ட முல்லை பெரியாறு.. பென்னிகுவிக் நினைவிடத்தில் வைகோ ... மலர் வழிபாடு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தேனி: முல்லை பெரியாறில் 142 அடி தண்ணீர் நிரம்பியதற்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (19.11.2014) லோயர் கேம்பில் உள்ள பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, குருனூத்துப் பாலத்தில் தண்ணீருக்கு பூ தூவி மலர் தூவி வரவேற்றார்.

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைப் பெரியாறு அணை 142 அடியை நெருங்கியுள்ளது. 136 அடியாக இருந்த அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு வைகோ தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதனிடையே முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது.

அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக 142 அடியை அணை நீர்மட்டம் நெருங்கியுள்ளது. இதனையொட்டு முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் முல்லை பெரியாறில் 142 அடி தண்ணீர் நிரம்பியதற்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (19.11.2014) லோயர் கேம்பில் உள்ள பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, குருனூத்துப் பாலத்தில் தண்ணீருக்கு பூ தூவி மலர் தூவி வரவேற்றார்.

Vaiko visits Pennycuick memorial, pays floral tributes in the Mullaiperiyar water

அங்கு குவிந்திருந்த ஏராளமானோருக்கு வைகோ ஜிலேபி வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர் மு.பூமிநாதன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் பாஸ்கரசேதுபதி, மாணவர் மாநிலச் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் சரவணன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினர் பங்கேற்றனர்.

English summary
MDMK leader Vaiko visited Pennycuick memorial at the lower camp and paid floral tributes to the Mullaiperiyar water in Kurunuthu bridge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X