For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு: வைகோ வரவேற்பு

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்கும் கோரிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்ததற்கு வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் உரிமத்தை புதுப்பிக்க முடியாது...வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்கும் கோரிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்ததற்கு வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. பராமரிப்புப் பணிக்காக 15 நாட்கள் ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடப்பட்டது.

    பராமரிப்புப் பணி முடிந்தபிறகு மீண்டும் இயக்க ஸ்டெர்லைட் அனுமதி கேட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது.

    மகிழ்ச்சியளிக்கிறது

    மகிழ்ச்சியளிக்கிறது

    மீண்டும் இயக்க அனுமதி கிடைக்காததால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவித்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி மறுத்தும் தமிழக அரசு அறிவித்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    நிரந்தரமாக மூடல்

    நிரந்தரமாக மூடல்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்து இருக்கிறது என்று வந்துள்ள செய்தியும் பாராட்டுக்கு உரியதாகும். கடந்த 32 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து மறியல், உண்ணாவிரதம், நடைப்பயணம் என்ற பல போராட்டங்களை நடத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்தும், நான் தொடர்ந்த வழக்கில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பம் 28 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்றேன்.

    நிலுவையில் உள்ளது

    நிலுவையில் உள்ளது

    ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அதற்குத் தடை வாங்கியது. உச்சநீதிமன்றத்தின் 36 அமர்வுகளில் தொடர்ந்து நானும், வழக்கறிஞர் தேவதாசும் பங்கேற்றோம். அந்த நீதிமன்றத்தில் நான் மிக வலுவான வாதங்களை வைத்தபோதிலும் 2013 ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன்பின்னர் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் தொடுத்த வழக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.

    நிரந்தரமாக மூடப்பட வேண்டும்

    நிரந்தரமாக மூடப்பட வேண்டும்

    நாசகார ஸ்டெர்லைட்டின் விரிவாக்கத்தை எதிர்த்து குமரெட்டியாபுரம் கிராமத்து மக்களும், சுற்றுக் கிராம மக்களும் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தி வந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தொடர்ந்து அனுமதி இல்லை என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி அளிக்கவில்லை என்றும் வந்துள்ள செய்தி குமரெட்டியாபுரம் களம் அமைத்த போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்கிறேன். ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் விருப்பமும், எனது நிலைப்பாடும் ஆகும். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    MDMK general secretary Vaiko has welcomed the Pollution Board rejecting the demand for renewing the license of the Sterlite plant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X