For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல - பாரதிராஜா மீதான வழக்கு குறித்து வைரமுத்து ட்விட்டர் பதிவு

இயக்குநர் பாரதிராஜா வழக்கு குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜன.18ம் தேதி நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா இந்துக் கடவுள்களை அவமதித்து பேசியதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்து இருந்தன. இந்த புகார் மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Vairamuthu condemns case filed on Bharathiraja

இந்நிலையில், இன்று பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல;
ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராகவும், காவிரி விவகாரத்திலும் இயக்குநர் பாரதி ராஜா செயலாற்றி வருவதால், அவரை கைது செய்வதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.

English summary
Vairamuthu condemns case filed on Bharathiraja. Today Morning Vadapalani police filed two complaints on Director Bharathiraja on the grounds of assaulting Hindu Gods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X