For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்டாம் பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள்- வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: பட்டாம் பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுகள் என கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Vairamuthu thanked Tamilnadu government

மாணவர்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் சைக்கிள் டயரை எடுத்து கொண்டு தேர்வுக்கு செல்வது போன்ற மீம்ஸ்களும் உலா வந்தன. இந்த நிலையில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என குற்றம்சாட்டினர்.

எல்கேஜிக்கே இன்டர்வியூ வைக்கும் போது 5,8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தினால் என்ன தவறு என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் 5ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு ஆணையை ரத்து செய்வதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஆஹா.. அக்காவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சர் யாருய்யா.. வைரலாகும் ஆஹா.. அக்காவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சர் யாருய்யா.. வைரலாகும் "பொண்டாட்டி கணக்கு"!

இதை பலரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை நீக்கிய அரசுக்கு நீக்கமற நன்றி. பட்டாம்பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள் என தெரிவித்து உள்ளார்.

English summary
Vairamuthu thanked Tamilnadu Government for cancelling public exam for 5th and 8th standard students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X