For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலியும், சிங்கமும் இனி வீட்டில் இருந்தே லைவ் ஆக பார்க்கலாம்

வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உலாவரும் விலங்குகளை இணையதளம் மூலம் நேரடியாக பார்த்து ரசிக்க Live streaming வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலாவரும் விலங்குகளை இனி ஆன்லைன் மூலம் நேரடியாக கண்டு ரசிக்கும் வசதியை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 முதல் பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் வனவிலங்கு பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்கா என்ற பெயரில் இயங்கும் இந்த பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் வந்து நேரத்தை கழித்து செல்கின்றனர்.

Vandaloor Arignar Anna Zoological Park watch live streaming of animals

இதுவரை நேரில் சென்று கட்டணம் செலுத்தி பார்த்து மகிழ்ந்து இருப்போம். அரசு புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. உங்கள் தொலைபேசியிலோ அல்லது கணினி மூலமாகவோ நேரடியாகவே நேரலையில் வனவிலங்குகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்பதை காணலாம்.

அரசு அறிமுகப்படுத்தியுள்ள https://www.aazp.in/live-streaming/இந்த இணையதள முகவரியில் சென்று வனவிலங்குகள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கலாம். இணையதள முகப்பு உங்களை பூங்காவின் உள்ளேயே அழைத்து செல்லும் அனுபவத்தை அளிக்கிறது.

விலங்குகள் புகைப்படத்துடன் பெயரும் அடங்கிய இந்த இணைய தளத்தில் நீங்கள் பார்க்க நினைக்கும் விலங்கு அல்லது பறவையின் புகைப்படத்தை தொடுவதால் அந்த விலங்கோ அல்லது பறவையோ தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை காணும் வாய்ப்பை நேரடியாக அளிக்கிறது.

வீட்டில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வண்டலூர் பூங்காவில் உலா வரும் விலங்குகளை கண்டு மகிழலாம். அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா வழியாக நம்மால் இதை காண முடிகிறது. வண்டலூருக்கு செல்ல நேரம் இல்லாதவர்கள் நீண்ட நாள் கனவாக வர நினைப்பவர்கள் இதன் மூலம் நேரில் கண்ட அனுபவத்தை உணரமுடியும்.

நேரில் சென்று நிதானமாக, பலர் பார்த்தும் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கும் வனவிலங்குகளை நீங்கள் நினைத்த இடத்தில் இருந்து கொண்டே நிதானமாக கண்டு ரசிக்கலாம். விலங்குகள் பிரியர்களுக்கு இது ஒரு புது வித அனுபவத்தை அளிக்கும்.

English summary
Wildlife enthusiasts across the world will soon be able to view animals at the Arignar Anna Zoological Park in Vandalur through live streaming on the Internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X