For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வண்டலூர் பூங்காவில் கன்று ஈன்ற காட்டு மாடு... மொத்த எண்ணிக்கை 18 ஆனது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் காட்டுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. இதனால், பூங்காவில் உள்ள காட்டு மாடுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

வண்டலூர் கீதா

வண்டலூர் கீதா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி கீதா எனும் 12 வயது காட்டு மாடு குட்டி ஈன்றது.

7 வயது லட்சுமி

7 வயது லட்சுமி

இந்த நிலையில், லட்சுமி எனும் 7 வயது காட்டு மாடு 4-வது ஈனுவாக மார்ச் 7-ஆம் தேதி ஆண் கன்று ஒன்றை ஈன்றது.

4 வயது கவி

4 வயது கவி

இப்போது பிறந்துள்ள கன்றின் தந்தை இந்தப் பூங்காவில் பிறந்து வளர்ந்த கவி என்ற 4 வயது ஆண் காட்டு மாடாகும்.

ஆக மொத்தம் 18

ஆக மொத்தம் 18

இப்போது புதிதாய் பிறந்துள்ள இந்தக் கன்றுடன் சேர்த்து பூங்காவிலுள்ள காட்டு மாடுகளின் எண்ணிக்கை 10 ஆண் மாடு, 8 பெண் மாடு என மொத்தம் 18 ஆக உயர்ந்துள்ளது.

தேங்காய், வாழைப்பழம், கீரை

தேங்காய், வாழைப்பழம், கீரை

கன்று ஈன்றுள்ள காட்டு மாட்டுக்கு தேங்காய், கடலைப் பிண்ணாக்கு, கொண்டைக்கடலை, வாழைப்பழம், கீரை, சுரக்காய் ஆகியன சிறப்பு உணவாக கூடுதலாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
A seven-year-old-Indian gaur, Lakshmi, gave birth to a male calf at the Arignar Anna Zoological Park in Vandalur on March 7. The calf, which weighs around 22 kg, and the mother are healthy and both are getting special care from zoo veterinarians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X