For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டமார் டமார்.. ஒரு சிலையை கொண்டு செல்ல என்னா பாடுபட வேண்டியிருக்கு பாருங்க!

கற்பாறையின் பாரம் தாங்காமல் லாரி டயர் வெடித்து சிதறியது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆதிசேஷன் சிலை எடுத்துவந்த லாரி தயார் டமார்-வீடியோ

    வந்தவாசி: பட்டப்பகலில்.. நடுரோட்டில்... டமால் என்ற சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடினார்கள் மக்கள்! வெடிகுண்டு எல்லாம் வெடிக்கவில்லை!! ஒரு லாரியின் டயர் வெடித்து விட்டது. அவ்வளவுதான்!! அதுவும் சும்மா வெடிக்கவில்லை... சுமை தாங்காமல் வெடித்தது!

    பெங்களூர் ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், 7 தலை பாம்புடன் கூடிய ஆதிசேஷன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்கலாம் என கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

    ஆனால் இதை செதுக்க ஒரே கல்லிலான பாறை தேவைப்பட்டது. இந்த பாறை நம்ம வந்தவாசி பக்கம் இருக்கிற கொரக்கோட்டை கிராமத்தில் இருப்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

    ஆதிசேஷன் சிலை

    ஆதிசேஷன் சிலை

    அதனால் இந்த கிராமம் வந்து, சுவாமி சிலை செய்ய சுமார் 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரமுள்ள சுமார் 380 டன் எடையுள்ள பாறையை அறுத்து எடுத்தனர். அதேபோல, ஆதிசேஷன் சிலை செய்ய சுமார் 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரமுள்ள சுமார் 230 டன் எடையுள்ள கற்பாறையையும் வெட்டி எடுத்தனர்.

    240 டயர்கள்

    240 டயர்கள்

    இந்த 2 கற்பாறைகளையும் வெட்டி எடுத்தாயிற்று. இதில் ஒரு பாறையில் மட்டும் பெருமாளின் முகம், சங்கு சக்கரம், கைகள் ஆகியவை செதுக்கப்பட்டது. இப்போ இதை பெங்களூருக்கு கொண்டு செல்ல வேண்டும். கார்கோ லாரிகளில்தான் இதை எடுத்து செல்ல முடியும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படியே ஒரு கார்கோ லாரி ஏற்பாடானது. அதற்கு 240 டயர்கள் உள்ளன. அந்த லாரியில் நேற்று கற்பாறையை தூக்கி வைத்து சென்றார்கள்.

    வெடித்து சிதறியது

    வெடித்து சிதறியது

    ஆனால் வெயிட் தாங்காமல் டயர் மண் சாலையில் சிக்கி கொண்டது. இதை ரோட்டில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் வேடிக்க பார்த்து கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் லாரியின் டயர்கள் வெடிக்க ஆரம்பித்தன. டமார் டமார் என 6 டயர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

    50 நாள் ஆகும்

    50 நாள் ஆகும்

    பிறகு வேற டயர்கள் மாற்றப்பட்டது. லாரி சக்கரத்தின் அடியில் இருப்பு தகடுகள், கற்கள் கொட்டப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கியுள்ளது. இந்த லாரி பெங்களூரு போய் சேர இன்னும் 50 நாள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

    English summary
    Lorry Tire burst with 380 Huge monolithic Perumal statue near Vandavasi in Thiruvannamalai District.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X