For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரமக்குடியில் விஎச்பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: போலீஸுடன் தள்ளுமுள்ளு

பரமக்குடியில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    விஎச்பி யாத்திரையால் போலீஸுடன் மக்கள் தள்ளுமுள்ளு- வீடியோ

    பரமக்குடி: பரமக்குடியில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுவதற்காக "ராம் ராஜ்ய யாத்திரை" என்ற பெயரில் தமிழகத்தில் யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது..

    தமிழகத்திற்குள் ரதயாத்திரை நுழையும் பகுதியான செங்கோட்டையில் யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    எதிர்க்கட்சியினர் வாதம்

    எதிர்க்கட்சியினர் வாதம்

    ரதயாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்திய ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த ரத யாத்திரையால் மதக் கலவரம் உண்டாகும் என்பது எதிர்க்கட்சியினரின் வாதம்.

    நெல்லை புளியக்கரையில்

    நெல்லை புளியக்கரையில்

    நெல்லை புளியரையில் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த சென்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    இதுபோல் ஆங்காங்கே போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரத யாத்திரை எங்கும் நிற்காமல் வேகமாக செல்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தள்ளுமுள்ளு

    தள்ளுமுள்ளு

    இந்நிலையில் பரமக்குடிக்கு யாத்திரை சென்றது. அப்போது அங்கு பல்வேறு இடங்களில் தமுமுக, விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Various parties in Paramakudi opposes Viswa Hindu Parishad's rath yatra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X