For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹஜ் மானியத்தை போல கும்பமேளா, மானசரோவர் யாத்திரைக்கான செலவை ரத்து செய்வார்களா? திருமாவளவன்

ஹஜ் மானியத்தை போல கும்பமேளாவிற்கான செலவுகளும் ரத்து செய்யப்படுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஹஜ் மானியம் ரத்து செய்தது போல் கும்பமேளா யாத்திரைக்கான மானியத்தையும் ரத்து செய்வார்களா ? திருமா

    சென்னை : ஹஜ் பயணத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்திருப்பதன் மூலம் பாஜக தனது முஸ்லிம் வெறுப்பை வெளிப்படையாக காட்டி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

    இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரத்து செய்யப்படும் மானிய தொகையானது, முஸ்லிம்களின் நலவாழ்வுக்கும் கல்விக்கும் செலவிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

     நேரடி பயனாளர்கள் இல்லை

    நேரடி பயனாளர்கள் இல்லை

    அந்த அறிக்கையில், ஹஜ் மானியம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். அது நேரடியாக முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை. முஸ்லிம்கள் எவரும் இலவசமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவும் இல்லை. சவுதி அரேபிய அரசு ஹஜ் யாத்திரை நேரத்தில் விதிக்கும் சிறப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக வழக்கமான காலத்தில் வாங்குவதைப்போல சுமார் மூன்று மடங்கு கட்டணத்தை விமான நிறுவனங்கள் விதித்துவந்தன.

     எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல

    எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல

    கூடுதலாக விதிக்கப்பட்ட கட்டணத்தின் ஒரு பகுதியைத்தான் மத்திய அரசு வழங்கிவந்தது. ஹஜ் பயணம் செல்லும் ஒவ்வொருவரும் வழக்கமான விமானக் கட்டணம் அளவுக்கு பணம் செலுத்தித்தான் பயணம் மேற்கொண்டனர். கூடுதல் கட்டண விதிப்புக்கான காரணங்களை ஆராய்ந்து சவுதி அரேபிய அரசுடனும், விமான நிறுவனங்களோடும் பேசி அதைக் குறைப்பதற்குப் பதிலாக மானியத்தை ரத்துசெய்வது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

     அரசியலமைப்பு சட்டத்தில் ஹஜ்

    அரசியலமைப்பு சட்டத்தில் ஹஜ்

    பாஜக அரசு தனது நடவடிக்கைக்கு 2012ம் ஆண்டில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டியுள்ளது. அந்தத் தீர்ப்பு ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கும் மத்திய அரசின் கொள்கையை ரத்து செய்யவில்லை. மாறாக, அந்தக் கொள்கை அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் சரியானது என 2011ம் ஆண்டு அதே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. முஸ்லிம் மதத்தினருக்கு மட்டுமின்றி பிற சமயங்களின் நிகழ்ச்சிகளுக்கும்கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்தின் பணமும் சக்தியும் செலவிடப்படுவதையும் அந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

     ஜனநாயகசக்திகள் கண்டிப்பு

    ஜனநாயகசக்திகள் கண்டிப்பு

    ஹஜ் மானியத்தை ரத்துசெய்த பாஜக அரசு கும்பமேளாவுக்கும், மானசரோவர் யாத்திரைக்கும் செலவிடும் தொகையை நிறுத்துமா? பல்வேறு மாநில அரசுகள் மத வழிபாட்டுத் தலங்களுக்காகவும், பண்டிகைகளுக்காகவும், யாத்திரைகளுக்காகவும் செலவிடுகிற தொகையை எல்லாம் நிறுத்தச் சொல்லுமா? ஹஜ் மானிய ரத்து என்பது அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு அரசியலே தவிர வேறில்லை.

    அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பாஜக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையைக் கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    English summary
    VCK Leader Thirumavalavan condemns for ending Haj subsidy to Muslim People. He also slams that the ending subsidy for Haj is shows the BJP Government hatredness on Muslim People.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X