For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க தி.மு.க. கூட்டணியில் இல்லவே இல்லை... திருமா, ஜவாஹிருல்லா திட்டவட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெறவில்லை என்று அக்கட்சித் தலைவர்களான தொல். திருமாவளவன் மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு அவசரக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

VCK, MMK break away from DMK alliance

இதைத்தொடர்ந்து தாயகத்தில் மக்கள் நலனுக்கான கூட்டியத்தின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனும், ஜவாஹிருல்லாவும், திமுக கூட்டணியில் நாங்கள் தற்போது இடம்பெற்வவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடித்தது. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது தொகுதிப் பங்கீட்டில் தொடங்கிய விரிசல் தேர்தலுக்குப் பின் விஸ்வரூபமெடுத்தது. தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியிலேயே இல்லை என்றும் அறிவித்தும் உள்ளது விடுதலை சிறுத்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ending 8 years honeymoon, VCK leader Thol Thirumavalavan on Monday said that his party was not to continue in the DMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X