For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

EXCLUSIVE: பிறந்தது #WETOO.. விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் அதிரடி!

தலித் மக்களின் பிரச்சனைகளை பகிர வீ டூ ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு Me Too, தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்புகளை சொல்ல We Too- வீடியோ

    சென்னை: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்புகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், வகுப்புவாதத்துக்கு எதிராக எழுதியும் பேசியும் வருபவருமான ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மீ டூ... மீ டூ... என்ற வார்த்தை உலகமே உச்சரித்து கொண்டிருக்க வீ டூ (We Too) என்ற குரல் ஒரு பக்கமிருந்து ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இந்த புதிய ஹேஷ் டேக்கை தொடங்கி இருப்பவர் விடுதலை சிறுத்தை ரவிக்குமார்தான்!! வீ டூ என்பதை பற்றி "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் அவரிடமே கேட்டோம். அவர் அளித்த விளக்கங்கள்தான் இவை:

    VCK Ravikumar Creates We Too Hashtag

    கேள்வி: அது என்ன வீ டூ?

    சாதிய பாகுபாடு என்பது பாலின பாகுபாடை போலவே மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவது. எனவே மீடூ என்ற அந்த பிரச்சாரம் இன்று உலக அளவில் எடுத்து செல்லப்பட்டு, பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் இன்று வெளியிலே வந்து கொண்டிருக்கின்றன. அதை போலவே பலநூறு ஆண்டுகளாக சாதிய பாகுபாடுகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் தலித்துகளும் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களை பதிவு செய்ய வேண்டும்,அதன்மூலம் உலகின் கவனத்தை இப்பிரச்சனை மூலம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த வீ டூ என்ற ஹேஷ்டேக்கை நான் இன்று உருவாக்கி இருக்கிறேன்.

    [ ஆன் தி ஸ்பாட் அம்பலப்படுத்துங்கள்.. மீடூ வரும் வரை காத்திருக்காதீர்கள்! ]

    கேள்வி: உங்களின் இந்த வீ டூ ஹேஷ்டேக்கினால் எத்தகைய மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கிறீர்கள்?

    இதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் தமக்கு நேர்ந்த பிரச்சனைகளை முன்வைத்தால், மற்றவர்கள் அதனை கவனத்தில் எடுத்து கொண்டு அதை சரி செய்து கொள்வதற்கு, தங்களை அணுகுமுறையை மாற்றிக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். இந்தியாவில் தலித் இயக்கம் உருவான காலந்தொட்டு பெண்கள் இயக்கங்கள், அவர்களுடைய கோட்பாடுகள் அவற்றிலிருந்து தேவையானவற்றை கற்று கொள்கிறது. இரண்டுக்குமே பொதுவான விஷயம் உடல்ரீதியான பாகுபாடுதான். பாலியல் பாகுபாடு என்பதும் உடல்ரீதியான பாகுபாடுதான். அதுபோல, சாதி பாகுபாடு என்பதும், ஒரு வகையான பாகுபாடுதான். எனவே இவை எல்லாவற்றிற்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டுமே இந்த வெகுஜன வெளியில் அதிகம் விவாதிக்கப்படாத பிரச்சனைகளாக இருக்கின்றன.

    கேள்வி: அப்படியென்றால் மீடூ-க்கு இணையானதாக வீ டூ இருக்குமா?

    கண்டிப்பாக. ஒன்றிலிருந்து மற்றொன்று கற்றுக் கொள்ளவும், ஒன்றுக்கு மற்றொன்று துணையாக இருக்கவும் இந்த இரண்டு இயக்கங்களுக்கும் தேவை இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே வீ டூ என்பது மீ டூ-விற்கு இணையான ஒரு தோழமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். மீ டூ போலவே இந்த பிரச்சனைகளும் பேசப்பட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் நான் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

    English summary
    VCK Ravikumar Creates "We Too" Hashtag
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X