For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வேதா நிலையம், 81 போயஸ் கார்டன்".... ஜெ.க்கு மட்டுமல்ல சசி, இளவரசி,விவேக்கிற்கும் இது தான் அட்ரஸ்!

ஜெயலலிதாவிற்கு மட்டுமல்ல சசிகலா, இளவரசி, விவேக் உள்ளிட்டோரின் வாக்காளர் அடையாள அட்டையும் இதே விலாசத்தில் தான் இருக்கிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள் - கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன்?

    சென்னை : வேதா நிலையம், போயஸ் கார்டன், தேனாம்பேட்டை இது ஜெயலலிதாவின் விலாசம் மட்டுமல்ல சசிகலா, இளவரசி, விவேக் உள்ளிட்டோரின் விளாசமும் இது தான். இந்த முகவரியில் தான் இவர்கள் அனைவரின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளது.

    ஜெயலலிதா தமிழக அரசியலுக்க அறிமுகமான காலம் முதல் பிரபலமானது அவருடைய போயஸ் கார்டன் வீடு. அரசு ஆவணங்களில் உள்ளபடி கடந்த 15 ஜூலை 1967ல், சென்னை, போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, தன் பெயரில் வாங்கினார்.

    24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் சர்வே எண்: 15/67. வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், போயஸ் தோட்டம் இல்லம், சென்னை, தேனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தது.

    வேதா இல்ல சிறப்பு

    வேதா இல்ல சிறப்பு

    போயஸ் கார்டனுக்குள் சென்றவர்களுக்கு அந்த மாளிகையின் பிரம்மாண்டம் தெரியும் மிகப்பெரிய ஸ்விம்மிங் பூல், வாசலில் மிகப்பெரிய பலா மரம், அழகிய பூந்தோட்டம், 20க்கும் மேற்பட்ட அறைகள் அவற்றில் ஒவ்வொரு அறையிலும் ஏசி என வெளித் தோற்றமே காண்போரை மிரள வைக்கும். வீட்டின் பிரதான நுழைவுக் கதவே கோயில் கதவு போலத் தான் இருக்கும், இதைத் திறந்து வந்து ஜெ. தொண்டர்களை சந்திக்கும் அந்த தருணத்திற்காக வாசலில் காத்துக் கிடப்பர் தொண்டர்கள்.

    வெளியில் தங்காத ஜெ.

    வெளியில் தங்காத ஜெ.

    ஜெயலலிதாவின் அடையாள இடமான போயஸ் கார்டன் வீட்டில் இருப்பதையே அவர் உயிரோடு இருந்த காலத்தில் மிகவும் விரும்பினார். போயஸ் கார்டன் வீட்டிற்கு அடுத்தபடியாக அவர் விரும்பி ஓய்வெடுக்கும் இடம் கொடநாடு பங்களா. ஜெயலலிதா பிரச்சாரம், வழக்கு விசாரணை என்று கட்சிப் பணிக்காகவோ, அரசுப் பணியாகவோ வெளியூர் அல்லது வெளிமாநிலம் சென்றாலும் ஒரு இரவு கூட வெளியில் தங்கியதில்லை.

    ஜெயலலிதாவின் அடையாள இடம்

    ஜெயலலிதாவின் அடையாள இடம்

    அவர் சிறையில் இருந்த காலம் தவிர மற்ற எல்லா இரவுகளையும் ஜெயலலிதா வேதா இல்லத்திலும், கோடை காலங்களில் கொடநாடு எஸ்டேட்டிலுமே கழித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு பிணைப்பாகிப் போன வேதா நிலையம், 81 போயஸ் கார்டன், தேனாம்பேட்டை என்பது அவருக்கான அடையாளம் மட்டுமல்ல.

    இளவரசி, விவேக்கிற்கும் அட்ரெஸ்

    இளவரசி, விவேக்கிற்கும் அட்ரெஸ்

    சசிகலா, இளவரசி, விவேக் உள்ளிட்டோருக்கும் இந்த விலாசத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை இருக்கின்றன. ஜெயலலிதாவுடனே இருந்த இவர்களுக்கும் இதே விலாசம் தான் அடையாளமாக இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் என்று சொல்லும் ஜெ. தீபாவிற்கோ, தீபக்கிற்கோ இந்த விலாசத்தில் எந்த அடையாள அட்டையோ ரேஷன் கார்டோ இல்லை என்பது தான்.

    English summary
    81 Poes garden Veda Nilayam is not only the address of Jayalalitha but also it is the address of Sasikala, Ilavarasi and Vivek also having voter id and ration card in this address.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X