For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைட்ரோ கார்பன் திட்டம்: டெல்டாவில் 2 இடங்களில் ஆய்வு செய்யும் ஸ்டெர்லைட்!

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதியில் இரண்டு இடங்களில் விரைவில் ஆய்வு நடத்த இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதியில் இரண்டு இடங்களில் விரைவில் ஆய்வு நடத்த இருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏலத்தை ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் பெற்றுவிட்டது. இந்த நிலையில் விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

டெல்லியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் வேதாந்தா நிறுவனம் ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா. ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தற்போது ஹைட்ரோ கார்பனும் எடுக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ளது. இந்தியா முழுக்க 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது.

[பாஜகவில் இணைந்தால் "இதெல்லாம்" தருவதாக ஆசை வார்த்தை.. காங்கிரஸ் பெண் தலைவர் பகீர் தகவல்! ]

ஏலம் வெற்றி

ஏலம் வெற்றி

தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. மத்திய அரசிடம் இதற்காக மொத்தமாக 3934 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் இன்னும் ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி ஹைட்ரோ கார்பன் எடுக்கும். முதலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதாக இருந்த ஜெம் நிறுவனம் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது.

ஒப்பந்தம் கையெழுத்து

ஒப்பந்தம் கையெழுத்து

இதற்கான ஒப்பந்தம் மட்டும் இன்னும் கையெழுத்தாகவில்லை. டெல்லியில் நடக்கும் நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்தியா முழுக்கவே அதிக இடங்களில் வேதாந்தா நிறுவனம்தான் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. ஓஎன்ஜிசி மொத்தமாகவே மூன்று இடங்களில் மட்டுமே ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளது.

சோதனை செய்ய உள்ளது

சோதனை செய்ய உள்ளது

இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஆய்வு இருக்கிறது. டெல்டாவில் இரண்டு பகுதிகளில் ஆய்வு செய்ய இருக்கிறது. ஆனால் எங்கு என்று இன்னும் விவரம் முழுதாக வெளியாகவில்லை. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

English summary
Vedanta will explore in Delta region of TN over Hydrocarbon project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X